For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரைவு வாக்காளர் பட்டியல் அக் 1ல் வெளியிடு

Google Oneindia Tamil News

Summary revision of voters’ list from October 1
நெல்லை: தமிழகத்தில் அனைத்து மாவட்டவங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் அக் 1ல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்த ஒவ்வொரு ஆண்டிலும் மேற்கொள்ளப்படும். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 1ம் தேதி வெளியாகிறது. இந்த பட்டியலை அனைத்து ஆர்டிஓ அலுவலகங்கள், தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் பொது மக்கள் பார்க்கலாம்.

பொதுமக்கள் அவற்றில் தங்கள் பெயர் உள்ளதா என சரி பார்த்து கொள்ளலாம். 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை கணக்கில் கொண்டு அன்றே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடங்குகிறது.

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

பெயர் சேர்க்க படிவம் 6ம், நீக்க படிவம் 7ம், திருத்தம் செய்ய படிவம் 8ம், ஒரே தொகுதிக்குள் மாற்றம் செய்ய படிவம் 8ஏம் தனித்தனியாக விண்ணபிக்க வேண்டும்.

பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்தில் போட்டோ ஓட்டுவதுடன் முகவரிக்கான ஆதார சான்றாக ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றின் நகல் இணைக்க வேண்டும்.

இது தவிர ஆன்லைன் மூலமும் வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அக் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் நடத்தப்படும் கிராம சபை கூட்டத்திலும் வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, ஓரே தொகுதிக்குள் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். இதற்காக தேர்தல் ஆணையம் 31 நாள் அவகாசம் வழங்கியுள்ளது. இதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் 2014ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படுகிறது.

English summary
The summary revision of the voters’ list with January 1, 2014 as the qualifying date in respect of the 13 Assembly constituencies in to commence on October 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X