For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோ நிலை மாறுபவர்... நம்பியிருந்தவர்களை நட்டாற்றில் விட்டு விட்டார் - டி. ராஜேந்தர்

மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகளை நட்டாற்றில் விட்டு விட்டு கூட்டணியை விட்டு வெளியே வந்து விட்டார் வைகோ என்ற லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை : மக்கள் நலக்கூட்டணி நீடிக்காது என கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே நான் கூறியிருந்தேன். இன்றைக்கு அது உண்மையாகி உள்ளது என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மக்கள் நலக்கூட்டணி உதயமானது. சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி படு தோல்வியை சந்தித்தது. இந்த கூட்டணி 6 மாதங்களுக்குக் கூட நீடிக்காது என்று அரசியல் கட்சிகள் ஆரூடம் கூறின. சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக விஜயகாந்த் விலகினார். இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகுவதாக வைகோ அறிவித்துள்ளார்.

வைகோவின் இந்த முடிவு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறுகின்றனர். புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ராம மோகன் ராவ் பேட்டி, ஜல்லிக்கட்டு விவகாரம், வைகோ பற்றி பேசினார்.

மத்திய அரசு பதில்

மத்திய அரசு பதில்

தமிழகத்தில் கண்ணாம்பூச்சி விளையாட்டு நடந்து வருகிறது. தற்போது ராம மோகனராவ் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் அரசு அதிகாரிகளும் மக்களின் நம்பகத்தன்மையை பெறும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும். அரசு அதிகாரியின் வீட்டிலேயே பல முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டு உள்ளதால் மக்கள் மத்தியில் அதிகாரிகளின் நம்பகத்தன்மை மிகவும் குறைந்து விட்டது.

திமுக அரசியல் லாபம்

திமுக அரசியல் லாபம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தி.மு.க. கடந்த சில ஆண்டுகளாக அரசியல் லாபத்திற்காக போராட்டம் நடத்தி வருகிறது. இதைப் போல அ.தி.மு.க. அரசும், மத்திய அரசும் இந்த பிரச்சனையை தொடர்ந்து வலியுறுத்தாமலும், காளையை காட்சிபடுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்காமலும் காலம் தாழ்த்தி வருகின்றன.

அரசியல் வெற்றிடம்

அரசியல் வெற்றிடம்

காவிரி பிரச்சனையிலும் தமிழக அரசின் செயல்பாடு திருப்தி அளிக்க கூடியதாக இல்லை. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இறந்த பிறகு தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது உண்மை. அதை யாராலும் ஈடுசெய்ய இயலாது. தமிழகத்தின் ஜீவநாடி பிரச்சனையை எல்லாம் ஜெயலலிதா துணிந்து முடிவு எடுத்து வெற்றியும் பெற்று உள்ளார்.

வைகோவின் நிலை

வைகோவின் நிலை

மக்கள் நலக்கூட்டணி நீடிக்காது என கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே நான் கூறியிருந்தேன். இன்றைக்கு அது உண்மையாகி உள்ளது. அன்றைக்கு அந்த கூட்டணியை உருவாக்கியவரும் வைகோ, இன்றைக்கு அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளை நட்டாற்றில் விட்டு விட்டு கூட்டணியை விட்டு வெளியே வந்த வரும் வைகோதான். வைகோ அடிக்கடி நிலை மாறுபவர் என்பதை நிரூபித்துள்ளார் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

English summary
LDMK leader R Rajendhar has slammed Vaiko and dubbed his as betrayer. central government should clarifies for Rama mohan rao's house IT raid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X