For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மின்வாரியம் தனியாரிடம் ரூ 27, 147 கோடிக்கு மின்சாரம் வாங்குகிறது!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மின்வாரியம் நடப்பு நிதியாண்டில் ரூபாய் 27 ஆயிரத்து 147 கோடிக்கு மின்சாரம் வாங்க திட்டமிட்டுள்ளது. இதில் 4 தனியார் நிறுவனங்களிடம் இருந்து மட்டும் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மின் பற்றாக் குறையைப் போக்க, பல்வேறு திட்டங்களை தமிழக மின் வாரியம் மேற்கொண்டுள்ளது.

Tamil nadu power supply board ready to buy Power…

மின்சாரம் வாங்கும் தமிழகம்:

தனியார் காற்றாலைகள், மத்திய மின் நிலையங்கள், சுயதேவை மின் உற்பத்தி தனியார் நிலையங்கள், சூரிய சக்தி, தனியார் மின் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து மின்சாரத்தை வாங்கி வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்துக்கு விநியோகித்து வருகிறது.

27 ஆயிரத்து 147 கோடி:

இந்நிலையில் இந்த வருடத்திற்கான மின்சாரம் வாங்குவதற்கான செலவாக ரூபாய் 27 ஆயிரத்து 147 கோடியை மின் வாரியம் மதிப்பிட்டுள்ளது.

அதிகபட்ச விலை நிர்ணயம்:

இதில் மத்திய மின் நிலையங்கள், காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்கள், வெளி மாநில மின் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து வாங்கும் விலையைவிட குறிப்பிட்ட 4 தனியார் மின் நிலையங்களுக்கு மட்டும் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் வாரியத்துக்கு கொள்முதல் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

நஷ்டத்திற்கான காரணம்:

தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவீதத்தை மின்சாரம் வாங்குவதற்கே செலவிடுவதால்தான் நஷ்டம் அதிகரித்து வருவதாக மின் நுகர்வோரும், தொழில்துறையினரும் தெரிவிக் கின்றனர்.

நியாமான விலை நிர்ணயம்:

தனியார் நிறுவனத்தில் மின்சாரம் வாங்குவதற்கு ஒழுங்கு முறை ஆணையத்தில் வாரியம் முறைப்படி அனுமதி பெற்று நியாயமான விலை நிர்ணயித்து வாங்க வேண்டும்.

அதிகபட்ச கொள்முதல்:

ஆனால், ரூபாய் 5.50 க்கு மேல் தனியாரிடம் மின்சாரம் வாங்கினால் நஷ்டம் அதிகரிக்கும் என்று ஒழுங்கு முறை ஆணையம் எச்சரித்த நிலை யிலும், கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிட்ட 4 நிறுவனங்களிடம் இருந்து எந்த அத்திவாசியமும் இல்லாத நிலையில், அதிகபட்சமாக ரூபாய் 15 க்கு மின்சாரம் வாங்கி 200 கோடி நஷ்டமடைவது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Nadu power supply board decided to buy power from 4 new organizations for 27 thousand 147 crores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X