"நோட்டா".. எங்களுக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும் எதிரானது.. வெட்கப்பட வேண்டும்.. தமிழிசை

Posted By:
Subscribe to Oneindia Tamil

  ஆர்.கே.நகர் தோல்விக்கு சீனியர் தலைவர்கள் தான் காரணம்..டெல்லிக்கு தமிழிசை பரபர கடிதம்- வீடியோ

  சென்னை : நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் பாஜகவுக்கு எதிரானவை அல்ல என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன் அணி, நாம் தமிழர், பாஜக என கட்சிகள் போட்டியிட்டன. இவற்றில் தினகரன் வெற்றி வாகை சூடினார்.

  Tamilisai Soundararajan says that Vote for Nota is not against for BJP

  மற்ற கட்சிகளுடன் போட்டியிடாமல் பாஜக நோட்டாவுடன் போட்டியிட்டது. அனைத்து சுற்றுகளிலும் ஒன்றில் கூட நோட்டாவை விட ஒரு வாக்குகள் கூட அதிகம் பெறவில்லை. நோட்டா 2,373 வாக்குகளும், பாஜக 1,417 வாக்குகளும் பெற்றது.

  இதனால் பாஜக சமூக வலைதளங்களில் பயங்கர கேலி கிண்டலுக்கு ஆளாகின. கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

  அப்போது பட்டினப்பாக்கம் கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், நோட்டாவுடன் பாஜக குறைவாக வாங்கி விட்டதாக கூறுகின்றனர்.

  நாங்கள் சொல்கிறோம், எங்களுக்கு வரவேண்டிய வாக்குகள் வரவில்லை. ஏனென்றால் களமே கலங்கப்பட்ட களம். நோட்டா வாக்குகள் அதிகமானால் அது அனைத்து கட்சி தலைவர்களும் தலைகுனிய வேண்டிய தருணம்.

  நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் எங்களுக்கு மட்டும் எதிரான வோட்டுகள் அல்ல.
  யார் அந்த தேர்தலில் போட்டியிட்டார்களோ அந்த கட்சிகளுக்கும் எதிரானதும்தான் இந்த நோட்டா என்றார் அவர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP State President Tamilisai Soundararajan says that We couldnt say those who voted for Nota are not against for BJP.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற