இந்து அறநிலையத்துறை அறமே இல்லாத துறையாக உள்ளது.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் பேட்டி...வீடியோ

  மதுரை: இந்து அறநிலையத்துறை அறமே இல்லாத துறையாக உள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து நிகழ்ந்தது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் அதிகமாக சேதம் அடைந்தது. இதில் நூற்றுக்கணக்காக புறாக்களும் மடிந்து போனது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Tamilisai Soundararajan speaks about fire in Meenatchi Amman Temple

  இந்த நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்ய தமிழிசை சௌந்தரராஜன் களம் இறங்கி இருக்கிறார். இதற்காக இன்று அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆய்வு செய்தார்.

  இதன் பின் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் ''இந்து அறநிலையத்துறை அறமே இல்லாத துறையாக உள்ளது. கோவில்களில் கலை பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்'' என்றார்.

  மேலும் '' எதிர்காலத்தில் இப்படிப்பட்ட விபத்துகள் நிகழ்வது தடுக்கப்பட வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ பிடித்தது குறித்து விரிவான விசாரணை வேண்டும்'' என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamilisai Soundararajan visits the Madurai Meenatchi Amman Temple. She said that proper investing has to be done in this issue.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற