ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்தறாங்க.. திருச்சி பாஜக கூட்டத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சியில் திமுக கூட்டத்திற்கு எதிர் கூட்டம் நடத்தியது பாஜக. ஸ்டாலின் கூட சபாஸ் சரியான போட்டி என்று கூறி சில கேள்விகளை முன் வைத்தார். ஆனால் வெறும் சேர்களுக்கு பதில் கூறியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.

பொன். ராதாகிருஷ்ணனும், தமிழிசை சவுந்தரராஜனும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் என்று கூறி வெறும் சேர்களின் முன்னால் பொங்கி எழுந்தனர் என்று கூறியுள்ளனர்.

ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பாஜக பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்களைப் பற்றித்தான் பேசுகின்றனர். சேர்களைப் பற்றியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது சும்மா சாம்பிள்தான் மக்களே!

சேர்களுக்கு பொதுக்கூட்டம்

உயிர் இல்லா சேர்களை பிடித்து உட்கார வைத்து பொதுக்கூட்டம் போட்டதை பார்த்திருக்கியா? என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.

திமுக எதிர் பாஜக

திமுகவும், பாஜகவும் மாறி மாறி பொதுக்கூட்டம் போட்டு வருகின்றனர். ஆனால் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தலில் பாஜக தோல்வி தழுவும் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

எதிர்கட்சிக்காக போராட்டம்

ஆளுங்கட்சியை விட்டு விட்டு எதிர்கட்சிக்கு எதிராக போராடும் ஒரே கட்சி நம்ம பாஜக என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

ஒரே கட்சி பாஜக

மக்களுக்கு இடையூறு இல்லாம போராட்டம் நடத்தலாம்னு உச்சநீதிமன்றம் சொன்னத இந்தியாவிலயே ஏன் உலகத்திலயே கடைபிடிக்கற ஒரே கட்சி பாஜக மட்டும்தான் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

அதெல்லாம் வரமுடியாது

காலி சேர்கள் சொல்லும் கதைகள்... இதை வைத்து மீம்ஸ்கள் பதிவிட்டுள்ளனர் வலைஞர்கள்.

மாபெரும் பொதுக்கூட்டம்

நாட்டையே உலுக்கிய மாபெரும் பொதுக்கூட்டம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

இதேதான் வேலையா?

ஒரு கும்பல் விடுதி மாத்தி விடுதி டூர் போகுது...இன்னொரு கும்பல் கூட்டம் மாற்றி கூட்டம் போடுது என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TamilNadu BJP seems to have forgotten NEET now every leader is trying to convince that they pulled crowd

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற