ஜெ. பொறுப்புகளை ஏற்ற பிறகு முதல் முறை.. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடக்கிறது அமைச்சரவை கூட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். எனவே அவரிடமிருந்த துறைகள் மூத்த அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை ஒதுக்கப்பட்டது. ஆளுநர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். ஜெயலலிதா துறை ஏதுமில்லாத முதல்-அமைச்சராக பதவியில் தொடருகிறார்.

Tamilnadu cabinet meeting to be held by tomorrow headed by finance minister O.Paneerselvam

இந்நிலையில், இன்று அமைச்சரவை குழு கூட்டத்தை நடத்த பன்னீர்செல்வம் அழைப்புவிடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து துறை பொறுப்புகளை ஏற்ற பிறகு பன்னீர்செல்வம் நடத்தும் முதலாவது அமைச்சரவை கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை இக்கூட்டம் ஏற்படுத்தியுள்ளது.

காவிரி விவகாரம், உள்ளாட்சி தேர்தலுக்கு அதிகாரிகளை நியமிப்பது குறித்தெல்லாம் விவாதிக்கப்பட உள்ளதாக தற்போதுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu cabinet meeting to be held by tomorrow headed by finance minister O.Paneerselvam, likely to discuss Cauvery and local body issues.
Please Wait while comments are loading...