நெருங்கி வரும் நாடா புயல் மக்கள் செய்ய வேண்டியது என்ன?: தமிழக அரசின் அறிவுரைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

1.ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.

2.ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகார பூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.

3.புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.

4.கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.

Tamilnadu state Government issues statement about cyclone

5.தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாதுயெனில்வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகார பூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.

6.நீர்நிலைகள் மற்றும் ஆற்று கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கன மழை காரணமாக நீர் சூழ வாய்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.

7.சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.

8.நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்கவும்.

9.குழந்தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்கவும்.

10.மழைநீரில் செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினை வைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

11.மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு உள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.

12.அமைதியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாக எதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும் பயன்படலாம்.

13. அதிகார பூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.

14.மின்கம்பங்களிலிருந்து தளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாக தவிர்க்கவும்.

15.பேரிடரால் பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில் மட்டுமே செல்லவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
state Government issues statement Cyclone Nada Alert For Tamil Nadu

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற