Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA பரிசோதனை நடத்தணும்.." சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா விவகாரம் கடந்த சில மாதங்களாகவே பேசுபொருள் ஆகி வருகிறது. இவர்கள் விவகாரம் நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது. இதற்கிடையே மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ்.. இவரது கேட்டரிங் சேவை மாநிலம் முழுக்க பிரபலம். மேலும், சினிமா படங்களிலும் நடிப்பதில் ஆர்வமாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் தனியார் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சியிலும் நடுவராகப் பங்கேற்றுள்ளார். இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

Chennai High court has Orders DNA Test in Madhampatty Rangaraj Joy Crizildaa Case What is happening

பரபர குற்றச்சாட்டு

இதற்கு நடுவே பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சில மாதங்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் மேல் சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதாவது திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா புகாரளித்திருந்தார். மேலும், தங்களுக்கு 2023ல் திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். ஒரு கட்டத்தில் தான் கருவுற்றதாகவும் அப்போது தான் தன்னிடமிருந்து மாதம்பட்டி ரங்கராஜ் விலகியதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருந்தார்.

காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் ஜாய் கிரிசில்டா இது தொடர்பாகப் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா இடையில் மத்தியஸ்தம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இதற்காகச் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் நியமிக்கப்பட்டார்.

மரபணு சோதனை

இந்த விசாரணையில், தனது குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பதை நிரூபிக்க அவருக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் என ஜாய் கிரிசில்டா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜும் மரபணு சோதனைக்குத் தயார் எனத் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனுத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

விசாரணை

அதன்படி மனுத் தாக்கல் செய்யப்பட்ட சூழலில், அது நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி தரப்பில் மரபணு பரிசோதனை நடத்த அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவு

அதன்படி அவருக்கு விரைவில் மரபணு சோதனை நடத்தப்படும் என தெரிகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தடயவியல் துறையையும், ஆய்வகத்தையும் தொடர்பு கொண்டு, மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞர் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மரபணு பரிசோதனைக்குப் பிறகு.. மத்தியஸ்தர் செய்வோரிடம் அந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி வழக்கறிஞர் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையையும் மார்ச் 30ம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+