வங்கக் கடலில் எந்த புயலும் உருவாகவில்லை.. ஞாயிறு முதல் சென்னையில் மழை- தமிழ்நாடு வெதர்மேன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வட தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழை இருக்கும் என்றும் சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், ராமேஸ்வரம் கடற் பகுதியில் இருந்து சென்னை கடற்பகுதி வரை தரைக்காற்று பலமாக வீசுகிறது. இதனால், இன்றும், நாளையும் சென்னையில் மழையை எதிர்பார்க்கலாம். டெல்டா, ராமநாதபுரம் பகுதிகளில் சனிக்கிழமை முதல் நல்ல மழை இருக்கும். ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து சென்னையில் மீண்டும் மழை தொடங்கும்.

வங்காள விரிகுடா கடலில் 'டாம்ரே' என்ற எந்த புயலும் உருவாகவில்லை. அவ்வாறு வரும் செய்திகளையும், வதந்திகளையும் நம்பாதீர்கள். அங்கு உருவாகி இருப்பது சாதாரண குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மட்டுமே. இதனால், சென்னையில், ஆங்காங்கே, ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

 தமிழகத்தில் 4 நாள்களுக்கு

தமிழகத்தில் 4 நாள்களுக்கு

மற்றவகையில் குறிப்பிடத்தகுந்த அளவில் பெரிய அளவிலான மழையை எதிர்பார்க்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு அல்லது திங்கள்கிழமை காலையில் இருந்துதான் உண்மையில் மழை தொடங்கும். ஒட்டுமொத்த வடதமிழகம் முழுமையும் 4 நாட்களுக்கு மழை இருக்கும்.

 தமிழக கடலோர மாவட்டங்கள்

தமிழக கடலோர மாவட்டங்கள்

வடதமிழகத்தில் சிறப்பான மழைபொழிவு என்பது வரும் 12-ஆம் தேதி முதல்தான் தொடங்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மூலம் மேகக்கூட்டங்கள் தமிழக கடற்கரைப்பகுதியில் உருவாகி மழை பொழிவைத் தரும்.

 கனமழையும் பெய்யும்

கனமழையும் பெய்யும்

வடதமிழக கடற்கரைப் பகுதியான டெல்டா முதல் சென்னை வரை பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் மழை இருக்கும். காற்று அடிக்கும் திசை,சுழற்சி உயர்வாக இருப்பதால், சிலநேரங்களில் கனமழை பெய்யக்கூடும். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கப்போகிறது.

 காற்று வீசும்

காற்று வீசும்

சென்னையில் மழை சிறப்பாகப் பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது, அதன் சூழலும் மழைக்கு ஏற்றார்போல் இருக்கிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வடமேற்கில் இருந்து காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

 பாம்பன் பாலத்தை கடக்கும்போது

பாம்பன் பாலத்தை கடக்கும்போது

மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்கள் காற்றின் வேகத்தால் திடீரென சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, காற்றின் வேகத்தை அறிந்து , எச்சரிக்கையுடன் செல்லவும். சென்னை முதல் ராமேஸ்வரம் கடற்கரை வரை அடுத்த 4 நாட்களுக்கு கூடுதலான காற்றுவீசக்கூடும். பாம்பன் பகுதியில் அதிகமான காற்றை எதிர்பார்க்கலாம். ஆதலால், பாம்பன் பாலத்தை மெதுவாக கடக்கவும் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TamilNadu Weatherman says that there is no cyclone in the Bay of Bengal and dont believe in any Rumors. Entire North TN could get 3-4 days of good rains.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற