கறுப்புச் சட்டையுடன் போராட்டத்திற்கு வந்த தமிமுன் அன்சாரி, பெ.மணியரசன் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோடிக்கு எதிர்ப்பு..விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம்- வீடியோ

  சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட வந்த தமிழக கலை இலக்கிய பண்பாட்டுக் கழகத்தினர், தமிழ் தேசிய பேரியக்க தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

  சென்னை விமான நிலையம் அருகே திரிசூலம் ரயில் நிலையப் பகுதியில் போராட்டம் நடத்த கறுப்புச் சட்டை அணிந்து இவர்களும், தொண்டர்களும் குவிந்தனர்.

  Tamimun Ansari and others arrested

  அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். கைது செய்யப்பட்ட தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், போராட்டத்தை நசுக்க போலீஸார் முயலுகின்றனர். ஆனால் நிச்சயம் மோடிக்கு எதிரான எங்களது எதிர்ப்பை வலுவாக காட்டுவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

  தமிழா் அமைப்புகள் போராட்டத்தால் கிண்டி முதல் விமான நிலையம் வரை ஜிஎஸ்டி சாலை பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Police have arrested the leaders of Tamilaga kalai Ilakkiya Panpattu Kazhagam in Chennai this morning.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற