அய்யோ... குடிமக்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 25ஆம் தேதி டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் முருகானந்தம், அரசு பணியாளர் சங்க பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tasmac shops will be closed on january 25th

அப்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போராட்டம் குறித்து ஒவ்வொரு மாவட்டம் வாரியாக விளக்க கூட்டம் நடத்துவது. போராட்டத்திற்கு மற்ற சங்கங்களிடம் ஆதரவு கேட்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tasmac shops will be closed on january 25th relsolution passed in the tasmac employees meet at Trichy.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற