For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'U' கபாலிக்கு வரி விலக்கு.. படக் குழுவினர் மகிழ்ச்சி!

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினியின் கபாலி படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

வரும் வெள்ளியன்று இப்படம் ரிலீசாக உள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.

யு சான்றிதழ்...

யு சான்றிதழ்...

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் எந்தவொரு காட்சிக்கும் கட் கொடுக்காமல் யு சான்றிதழ் அளித்தனர்.

மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

தற்போது அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு இப்படத்திற்கு வரிவிலக்கு வழங்கியுள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரிலீஸ்...

ரிலீஸ்...

கபாலி படமானது வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் இதுவரை எந்த படங்களுக்கும் இந்தளவிற்கு அதிகமான திரையரங்குகளில் வெளியானதில்லை.

சாதனை...

சாதனை...

ஏற்கனவே, கபாலி படப்பாடல்கள், டீசர் மற்றும் டிக்கெட் விற்பனை என பல சாதனைகளைப் படைத்துள்ளது. எனவே, படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனையும் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Rajinikanth’s Kabali is all set to release on July 22nd. Thalaivar fans are dying to catch him in his Gangsta avatar. Now here’s another good news, tax exemption has been granted Rajinikanth’s Kabali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X