எடப்பாடி கோஷ்டியிடம் ஓபிஎஸ் கோஷ்டி கட்சி, ஆட்சியில் கேட்கும் டிமாண்டுகள் இவைதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளும் இணைவது உறுதியாகிவிட்ட நிலையில் படுமும்முரமாக பேரங்கள் நடைபெற்று வருகின்றன. ஓபிஎஸ் தரப்பில் மின்சாரத் துறை உள்ளிட்ட 6 இலாகாக்கள் வேண்டும் என வலியுறுத்தப்படுகிறதாம்.

சசிகலா, தினகரன் இல்லாத அதிமுக உருவாகிவிட்டது. இப்போது ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் மும்முரமாக இணைப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

Team OPS demands 6 Ministerial berths

இதில் மின்சாரம், நெடுஞ்சாலை, பொதுப்பனி, உள்ளாட்சி, உள்துறை மற்றும் சுற்றுலா ஆகிய 6 துறைகளை ஓபிஎஸ் தரப்பு தங்களுக்கு ஒதுக்க கேட்கிறதாம். கட்சியில் பொருளாளர் பதவியும் தங்களுக்கே வேண்டும் என்கிறதாம் ஓபிஎஸ் கோஷ்டி.

அத்துடன் ஆட்சி மன்றக் குழுவில் 3 உறுப்பினர் பதவி, உயர்மட்ட குழுவ்வில் 5 பதவிகள், உள்ளாட்சியில் 40% இடங்கள் தரவும் கோருகிறதாம் ஓபிஎஸ் அணி. இது தொடர்பான பேரத்தில் இருதரப்பும் தீவிரமாக விவாதித்து வருகின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Team OPS has demanded that 6 Ministerial berths from the Team EPS.
Please Wait while comments are loading...