For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை – திருவனந்தபுரம் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காட்பாடியில் சோதனைக்குப் பின் புறப்பட்டது

சென்னை – திருவனந்தபுரம் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

வேலூர்: சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கிளம்பிய எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தொலைபேசி மிரட்டலை அடுத்து காட்பாடி அருகே அவசரமாக நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்ததை அடுத்து ஒருமணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்ட ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ரயில்வே துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து ரயிலை காட்பாடி அருகே நிறுத்தி சோதனை நடைபெற்றது.

telephone call claiming a bomb is planted in thiruvananthapuram express train

மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக காட்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் சென்னை திருவான்மியூரில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

English summary
The Chennai Central to Trivandrum train was stopped at katpadi railway junction. Police and bomb disposal squads are checking the train. after train was moved
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X