வெளில போகும்போது குடையோட போங்க.. வெயிலிருந்து தப்ப.. மழைக்கு வாய்ப்பே இல்லையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை தமிழகத்தில் தற்போது மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு பிறகு வெப்பம் அதிகமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. இதனால் வறண்ட வானிலையோடு அனல்காற்றும் வீசி வருகிறது.

There is no chance for rain in tamil nadu now : Meteorological center

இந்நிலையில் அந்தமான் இலங்கை இடையே வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியிருப்பதாக சென்னை வானிலை மையம் அண்மையில் தெரிவித்தது. இதன்காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது.

இந்த நல்ல செய்தியைக் கேட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்திருந்தனர். ஆனார் தற்போதைக்கு தமிழகத்தில் மழைபெய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மியான்மரை நோக்கி சென்றுவிட்டதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.மேலும் அடுத்த 2 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடிக்கும் வெயிலுக்கு மழை பெய்யும் என்ற வானிலை மையத்தின் செய்தியை கேட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்த மக்கள் வானிலை மையத்தின் தற்போதைய தகவலால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Meteorological center says that there is no chance for rain in tamil nadu now. and after two days temprature will be increased in Tamilnadu it says.
Please Wait while comments are loading...