கரூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 உடல்கருகி பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

கரூர் மாவட்டம் நள்ளியம் பாளையம் அருகே கார் மீது அவ்வழியாக வந்த லாரி ஒன்று வேகமாக மோதியது. இதில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Three persons were died on the spot in the accident

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் வேகமாக பரவியது.

Three persons were died on the spot in the accident

இதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர். 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Three persons were died on the spot in the accident after car gets fire near Karur. 4 people were injured.
Please Wait while comments are loading...