For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியத்துக்கு ரூ.500 கோடி, இலவச பஸ் பாஸுக்கு ரூ.480 கோடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பட்ஜெட்டில் பசுமை வீடுகள் கட்ட ரூ.1,260 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.தமிழக வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர் வரும் நிதியாண்டில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.21,116 கோடியை மத்திய அரசு குறைத்துவிட்டதாக புகார் கூறினார். தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க நிதி ஆணையம் தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு வருவாய் ஆதாரத்திற்கு விற்பனை வரியை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

TN Budget allocates Rs 1260 cr for Green house scheme

உணவு மானியம்

பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு அமைப்பு மூலம் ரூ.5,500 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பஸ் பாஸ்

போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.480 கோடி நிதி.

பசுமை வீடுகள்

தமிழகத்தில் 60,000 பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி நிதி வழங்க முடிவு. குக்கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.

நதிநீர் இணைப்பு

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். நதிநீர் இணைப்பிற்காக பட்ஜெட்டில் ரூ.253. கோடி நிதி ஒதுக்கீடு.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு

தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ.5,248 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறைக்கு ரூ,8,228 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்புக்கு ரூ. 165 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கிராம சாலைகளை மேம்மபடுத்த பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்

காவல்துறைக்கு நிதி

காவல் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.5521 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காவல்துறைக்கு கட்டிடங்கள் கட்ட ரூ.538.49 கோடி நிதி ஒதுக்கீடு.

பொதுச் சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்மா திட்டம்

அம்மா திட்டம் மூலம் 49.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 40.3 கோடி மக்களுக்கு அம்மா திட்டம் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நேரடி மானியத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 34 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பயிர்க்கடன் அதிகரிப்பு

வேளாண்துறைக்கு ரூ.6,613 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தட்டுபாடின்றி உரங்கள் கிடைக்க ரூ.150 கோடியும், வேளாண் இயந்திர பயன்பாட்டை அதிகரிக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ரூ.4,955 கோடியாக பயிர்க்கடன் ரூ.5,500 கோடியாக அதிகரிப்பு. நெல் உற்பத்திக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
TN govt has allocated Rs 1260 crore green house scheme in the budget.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X