For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. அமைச்சரவையில் யார் நம்பர் 2, 3, 4, 5.. 30.. என்று தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவையில் சமீபத்தில் நடந்த மாற்றங்களைத் தொடர்ந்து அமைச்சர்களின் சீனியாரிட்டி வரிசை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சீனியாரிட்டி அமைச்சர்கள் பட்டியலை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சங்கத் வெளியிட்டுள்ளார்.

அதன்படி முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர்கள், அவர்களின் துறைகள் குறித்த விவரம் சீனியாரிட்டி வரிசைப்படி வெளியிடப்பட்டுள்ளது.

TN cabinet - new revised list

1. முதல்வர் ஜெயலலிதா - பொதுத் துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை.

2. ஓ.பன்னீர்செல்வம் - நிதி மற்றும் பொதுப்பணித் துறை (நிதி, திட்டம், சட்டப் பேரவைச் செயலகம், தேர்தல், பொதுப்பணித் துறை).

3. நத்தம் ஆர்.விஸ்வநாதன் - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.

4. ஆர்.வைத்திலிங்கம் - வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்.

5. எடப்பாடி கே.பழனிசாமி - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை.

6. பி.மோகன் - ஊரக தொழில்கள் துறை, தொழிலாளர் நலத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.

7. பி.வளர்மதி - சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை.

8. பி.பழனியப்பன் - உயர்கல்வித் துறை.

9. செல்லூர் கே.ராஜூ - கூட்டுறவு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத் துறை.

10. ஆர்.காமராஜ் - உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை.

11. பி.தங்கமணி - தொழில் துறை.

12. வி.செந்தில்பாலாஜி - போக்குவரத்துத் துறை.

13. வி.மூர்த்தி - பால்வளத் துறை.

14. எம்.சி.சம்பத் - வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை.

15. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி - வேளாண்மைத் துறை.

16. எஸ்.பி.வேலுமணி - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, ஊழல் தடுப்பு.

17. டி.கே.எம்.சின்னையா - கால்நடைத் துறை.

18. எஸ்.கோகுல இந்திரா - கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

19. எஸ்.சுந்தரராஜ் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை.

20. பி.செந்தூர் பாண்டியன் - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை.

21. எஸ்.பி.சண்முகநாதன் - சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்.

22. என்.சுப்ரமணியன் - ஆதிதிராவிடர் நலத் துறை.

23. கே.ஏ.ஜெயபால் - மீன்வளத் துறை.

24. முக்கூர் என்.சுப்பிரமணியன் - தகவல் தொழில்நுட்பத் துறை.

25. ஆர்.பி.உதயகுமார் - வருவாய்த் துறை.

26. கே.டி.ராஜேந்திர பாலாஜி - செய்தி மற்றும் விளம்பரத் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை.

27. கே.சி.வீரமணி - பள்ளிக் கல்வித் துறை.

28. எம்.எஸ்.எம்.ஆனந்தன் - வனத் துறை.

29. தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் - சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை.

30. டி.பி.பூனாட்சி - காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம்.

31. எஸ்.அப்துல் ரஹீம் - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை.

English summary
TN Govt's chief secretary Mohan Vargheese Chungath has released the new seniority list of TN ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X