For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 முக்கிய சாலை விதிகள்...மீறினால் 6 மாதம் உரிமம் ரத்து...அரசு அதிரடி!

சாலை விதகளை மீறினால் 6 மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலான 6 முக்கிய சாலை விதிகளை மீறினால் நிச்சயம் 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் 6 முக்கிய சாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டள்ளது.

TN government announces driving license cancelled for 6 months those who didn't obey rules

• இதன்படி அதிவேகமாக வாகனம் ஒட்டுவது, சிவப்பு விளக்கு மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது/சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

• இதே போன்று செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஒட்டுவது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுவது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கும் 6 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற நடவடிக்கையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

• உச்சநீதிமன்றம் சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத்தல் அடிப்படையில் போக்குவரத்து துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் வகிக்கும் நிலையில் இதனை குறைக்கும் வகையில் போக்குவரத்து ஆணையர் மூலமாக RTO அலுவலர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

• ஏற்கனவே ஜூன் 6 ம் தேதி தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், டி.ஜி.பி போக்குவரத்து செயலர் கொண்ட கூட்டம் நடைபெற்றது.
இதன் காரணமாக தான் ஜூன் 20 அறிவிப்பில் வாகன ஒட்டிகள் கட்டாயம் ஒரிஜினல் லைசன்ஸ் இருக்க வேண்டும் என அறிவிப்பு செய்திருந்தார்கள்.

• இதற்கு முன்பு குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேக விபத்துக்கு மட்டுமே லைசன்ஸ் ரத்து என்ற விதி இருந்தது. இதே போன்று ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதல் முறை ஒரு கட்டணம், அடுத்தடுத்த முறை அதிக கட்டணம் என அபராதம் வசூலிக்கப்படுகிறது.

English summary
TN transport secretary passed circular to RTO's that those who are not following the 6 strict rules their driving license should be cancelled for 6 months
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X