For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடை நீக்கம் ஆன அரசு ஊழியருக்கும் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சம்பளம் பெறாத அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் அகவிலைப்படியை உயர்த்தியது. ஆனால் ஊழியக் குழுவின் பரிந்துரையில் முரண்பாடு உள்ளவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், பணியின்போதே இடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாமல் இருந்தது. இதுபோன்ற காரணங்களால் சம்பளம் பெறாதவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அரசு தற்போது அறிவித்துள்ளது.

தமிழக நிதித்துறை செயலாளர் இதற்கான உத்தரவை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒய்வூதியதாரர்கள் அகவிலைப்படி 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே இது பொருந்துவதாக இருந்தது.

இப்போது சம்பளம் பெறாதவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 1ம் தேதியில் இருந்து கணக்கிட்டு அவர்களும் அகவிலைப்படி உயர்வு பெறுகிறார்கள். இதன்மூலம் அவர்களுடைய மொத்த சம்பளம் அகவிலைப் படியையும் சேர்த்து 183 சதவீதத்தில் இருந்து 200 சதவீதம் ஆகிறது.

அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளி அலுவலகங்கள், உள்ளாட்சி மன்ற அலுவலகங்கள், பல்கலைக்கழக மானிய குழு அரசு மற்றும் மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், கிளார்க்குகள் ஆகியோருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பெருந்தும் என்று தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Government sanction the revised rate of Dearness Allowance to the State Government employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X