நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்: ஸ்டாலின்
நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

கோவை: நீட் தேர்வெழுத வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்ய முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
கோவையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மாணவர்களை வஞ்சித்து விட்டது. கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளதால் மாணவர்களும் பெற்றோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், மொழி தெரியாத மாநிலங்களில் சென்று சிரமப்படும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாநில அரசு உதவ முன் வர வேண்டும். விமான பயணக் கட்டணம், பெற்றோருடன் தங்குவதற்கான வசதி உள்ளிட்ட அனைத்தையும் தமிழக அரசு செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
ஏற்கனவே, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் தமிழக அரசு மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications