For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெருங்கி வரும் தேர்தல்... தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் இன்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதவாது: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

TN govt has shifted 13 IAS officers in the state

1. மாநில கிராமப்புற சுகாதார இயக்ககத்தின் திட்ட இயக்குநராக இருந்து வந்த ஷம்பு கல்லோலிகர், வேளாண்மைத் துறை ஆணையாளர் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2. ஆர்.லலிதா கூட்டுறவு-உணவு-நுகர்வோர் பாதுகாப்பு துணைச் செயலாளர் (சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்)

3. தயானந்த் கட்டாரியா, சிறுபான்மையினர் நலத் துறை ஆணையாளர் (டெல்லி மேம்பாட்டு ஆணையரக முன்னாள் ஆணையாளர்)

4. ஏ.சுகந்தி, ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை இணைச் செயலாளர் (தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர்)

5. பி.செந்தில்குமார், கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத் துறை இணைச் செயலாளர் (பட்டு வளர்ப்புத் துறை முன்னாள் இயக்குநர்)

6. ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், ஆதி திராவிடர்-பழங்குடியினர் நலத் துறை துணைச் செயலாளர் (சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையாளர்-மத்தியம்)

7. ஹேமந்த் குமார் சின்கா, டான்சி நிறுவனத்தின் தலைவர்-நிர்வாக இயக்குநர் (இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர்)

8. சுப்ரியா சாகு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (தகவல்-ஒலிபரப்புத் துறை இணைச் செயலாளர்)

9. சுபோத்குமார், சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையாளர்-மத்தியம் (பள்ளி கல்வித் துறை துணைச் செயலாளர்)

10. ராஜேந்திர ரத்னு, சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையாளர் (பூம்புகார் கப்பல் கழகத்தின் நிர்வாக இயக்குநர்)

11. ஸ்மிதா நாகராஜ், ராணுவத் துறை இயக்குநர் ஜெனரல் --கொள்முதல் பிரிவு (தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர்)

கூடுதல் பொறுப்பு: 5-வது மாநில நிதி ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் பொறுப்பு, கூடுதல் பொறுப்பாக நிதித் துறையின் துணைச் செயலாளராக உள்ள பிரஷாந்த் எம்.வாட்னேரேவிடம் அளிக்கப்படுவதாக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

English summary
statement issued by Secretary of State government Gnanadesikan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X