ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் டிஜிபிக்களாக பதவி உயர்வு- 14 அதிகாரிகள் இடமாற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றமும், பதவிஉயர்வும் வழங்கி உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து உள்துறை செயலரும், கூடுதல் தலைமை செயலருமான நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள ஆணையில் 5 பேருக்கு பதவி உயர்வும், மீதமுள்ள 9 பேருக்கு இடமாற்றமும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

TN IPS officers got promotions and transfers from immediate effect

1. ஜாங்கிட் (பொருளாதார குற்ற பிரிவு ஏடிஜிபி)- டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தின் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு டிஜிபியாக நியமனம்.

2. ஜே.கே. திரிபாதி (சென்னை சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி)- டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய வாரியத்தின் டிஜிபியாக நியமனம்

3. சி.கே.காந்திராஜன் (மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஏடிஜிபி)- டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது, மாநில மனித உரிமை ஆணையத்தின் டிஜிபியாக நியமனம்.

4. சுஜித்குமார் (சேலம் ஊரக பிரிவின் ஏஎஸ்பி)- காவல் துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு காலியாக உள்ள கோவை போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்

5. ரோஹித் நாதன் ராஜகோபால் (ஓசூர் உட்பிரிவு ஏஎஸ்பி)- காவல் துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அடையாறு ,கிரேட்டர் சென்னை காவல்துறை துணை ஆணையராக நியமனம்

6. சுந்தரவடிவேல் (அடையாறு, கிரேட்டர் சென்னை காவல் துறை துணை ஆணையர்)- சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணி துணை ஆணையர்

TN IPS officers got promotions and transfers from immediate effect

7. தமிழ்ச்செல்வன் (சென்னை கடலோர பாதுகாப்பு குழுவின் ஏடிஜிபி) - காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மேலாண் இயக்குநராக தமிழ்செல்வன் நியமனம்

8. விஜயகுமார் (தமிழ்நாடு வீட்டு வசதி நிறுவனத் தலைவர் மற்றும் ஏடிஜிபி)- திரிபாதி வகித்த சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம்

9. சுனில் குமார் சிங் (ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டெட் ஏடிஜிபி)- ஜாங்கிட் வகித்து வந்த பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம்

10. கே.வன்னிய பெருமாள் (லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி, சென்னை பிரிவின் மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிகாரி ஏடிஜிபி)- தமிழ்செல்வன் வகித்து வந்த சென்னை கடலோர பாதுகாப்பு குழுவின் ஏடிஜிபியாக நியமனம்

11. கருணாசாகர் (நிர்வாக பணி ஏடிஜிபி)- சுனில்குமார் வதித்து வந்த ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டெட் ஏடிஜிபியாக நியமனம்

TN IPS officers got promotions and transfers from immediate effect

12. ராஜீவ் குமார் (சென்னை- நவீனமயமாதல் ஏடிஜிபி)- பிரதீப் பிலீப் வகித்து வந்த காவலர் நலப் பிரிவு ஏடிஜிபி

13. பிரதீப் வி. பிலீப் (காவலர் நலப்பிரிவு ஏடிஜிபி)- காலியாக உள்ள உணவு வழங்கல் மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவின் சிஐடி, சென்னை

14. வினித் தேவ் வாங்கடே (காவல்துறை ஐஜி- கட்டாய காத்திருப்போர் பட்டியல்)- சென்னை நவீனமயமாதல் துறைக்கான காவல் துறை ஐஜி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
14 IPS officers of TN got promotions and transfers and the order was released by Home secretary Niranjan Mardi

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற