• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"இச்சாதாரி" பாம்புகள்... இரு தார சண்டைகள்.. ஆட்டிப்படைக்கும் சீரியல்கள்.. அடிமையாகும் பெண்கள்!

By Mayura Akilan
|

சென்னை: கண் தெரியாத கர்ப்பிணி வெண்ணிலாவை கடத்திட்டாங்களே... யாரா இருக்கும் சேனாவா? இல்லை மாமாவா என்று குழம்பி போனதோடு சோகத்தோடு பேசி வருகின்றனர் இல்லத்தரசிகள்.

இது ஏதோ பக்கத்து வீட்டு சமாச்சாரம் இல்லை. சன்டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் வள்ளி சீரியலின் கதையைத்தான் இப்படி சீரியஸ் ஆக பேசி வருகின்றனர்.

சன் டிவியில் காலை முதல் இரவு 10 மணி வரை சீரியல்மயம் தான். எல்லாம் அடுத்தவர் குடியை கெடுப்பதுதான். இருதார கதை, இல்லாவிட்டால் பாம்பு அல்லது பேய் பழிவாங்கும் கதையாக இருக்கிறது. டிவி சீரியலுக்கு சென்சார் இல்லாவிட்டால் இந்த கொடுமைகளை சகித்துதான் ஆகவேண்டும்.

பழிவாங்கும் பேய்

பழிவாங்கும் பேய்

காலை 11 மணிக்கு அபூர்வ ராகங்கள் சீரியலில் பேய் பழிவாங்க வந்து பவித்ராவின் வாழ்க்கையை சீரழிக்க நினைக்கிறது. இது ஒருதலைக்காதலால் தற்கொலை செய்து கொண்ட பெண் பேயாக பழி வாங்க வருகிறாள்.

அக்கா வாழ்க்கையை கெடுக்கும் தங்கை

அக்கா வாழ்க்கையை கெடுக்கும் தங்கை

பொம்மலாட்டம் சீரியலில் அக்கா பாரதியின் வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் தங்கை மாலதி. அண்ணனை கொன்று விட்டு சொத்துக்களை அமுக்க நினைக்கும் நினைக்கும் நடராஜன் என கதை ஆயிரம் எபிசோடுகளாக போய்க்கொண்டிருக்கிறது.

பழிவாங்கும் கதைகள்

பழிவாங்கும் கதைகள்

சந்திரலேகாவோ, கல்யாணப்பரிசோ எந்த சீரியல் என்றாலும் பழிவாங்கும் கதையாகத்தான் இருக்கிறது. இருதாரமணத்திற்கு ஆதரவு, கள்ளக்காதலுக்கு ஆதரவு என போகிறது சீரியல்கள். கூடவே இருந்து குழி பறிப்பது எப்படி என்றும் பயிற்சி கொடுக்கிறார்கள்.

கண் தெரியாத வெண்ணிலா

கண் தெரியாத வெண்ணிலா

கண் தெரியாத தங்கையின் வாழ்க்கையை காப்பாற்ற வள்ளி ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறாள். வெண்ணிலா கர்ப்பமாக இருக்க அவளை கடத்தி விடுகின்றனர். வெண்ணிலாவை கடத்தியது யார் என்பதுதான் இப்போது சஸ்பென்ஸ்.

பழிவாங்கும் பாம்பு

பழிவாங்கும் பாம்பு

நாகதோஷம் உள்ள குடும்பத்தை பழிவாங்க வந்திருக்கும் பெண், அடிக்கடி பாம்பாக மாறி கண்ணை உருட்டி மிரட்டு பயமுறுத்த நினைக்கிறாள். கதாநாயகி மகாலட்சுமியை அழுகை லட்சுமி என்று வைத்திருக்கலாம் சீன் பை சீன் அழுவது எப்படி என்று எங்கிருந்துதான் கற்றுக்கொண்டாரோ தெரியலையே.

சக்களத்தி சண்டை

சக்களத்தி சண்டை

பாசமலரில் உமாவிற்கும் கோகிலாவிற்கும் மீண்டும் சக்களத்தி சண்டை ஆரம்பித்து விட்டது. அம்மன் வந்து ஒருபக்கம் பயமுறுத்த... அதைக்கண்டு தாமரை அஞ்ச... இப்போது இறந்து போனதாக கூறப்பட்ட கோகிலா மீண்டும் திரும்பி வந்து இப்போது தனது சண்டையை ஆரம்பித்து விட்டாள்.

பத்துகோடி கதைகள்

பத்துகோடி கதைகள்

குலதெய்வம் பழிவாங்கும் படலமாக நகர, பத்து கோடியை வைத்து கதை நகருகிறது தெய்வமகள். வம்சம் தொடரோ ஜோதிகாவின் திருமணத்தை வைத்து ஒருவாரமாக இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் பத்துகோடி கதையாகவே இருக்கிறது.

படமாக விரியும் கொலை

படமாக விரியும் கொலை

குலதெய்வம் கோவிலுக்கு போன உமாவின் குடும்பத்தினர் சந்திக்கப் போவது என்ன? அங்கே கொலை நடக்குமா? வாணி ராணியில் தேஜூவை சரவணன் திருமணம் செய்து கொள்வானா? என்ற சஸ்பென்ஸ் உடன் போகிறது கதை.

கொலை செய்யும் நாகங்கள்

கொலை செய்யும் நாகங்கள்

நாகினியில் கொலை செய்யும் வெறியோடு அலையும் கவர்ச்சி நாகங்கள்தான் இரவு தூங்கும் நேரத்தில் அனைவரின் வீடுகளுக்கும் வந்து செல்கிறது. ஊரே அமைதியாக இருக்க மகுடிச்சத்தம் மட்டும் அனைவரின் வீடுகளிலும் கேட்கிறது. மொத்தத்தில் சீரியலில் தொடங்கி சீரியலுடன் முடிகிறது இல்லத்தரசிகளின் ஒருநாள்.

வள்ளியும் வாணியும்

வள்ளியும் வாணியும்

கதை புத்தகம் படித்து சமையல் குறிப்பு படித்து கதை பேசிய பெண்கள் கூட்டம் இப்போது வள்ளி வாழ்க்கை இப்படி ஆயிருச்சே... வாணி மருமகள் ஏன் இப்படி இருக்கா என்று பக்கத்து வீட்டு பெண்களின் கதையை பேசுவது போல சீரியல் நாயகிகளின் கதையை பேசி பொழுதை கழித்து வருகின்றனர் என்பதுதான் கொடுமை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Tamil-Nadu so many ladies are addicted for TV serials. On the serial timing they will postpone all their regular and important works to other time. Some times the serial is one of the reason for fights inside the family members. Ladies serial is one of the time pass this is not very important in life.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more