அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி உட்பட சொத்துகள் முடக்கம்.. வருமானவரித்துறை அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி உள்ளிட்ட சொத்துகளை வருமானவரித்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்காக பணப்பட்டுவாடா செய்யும் பொறுப்பை கவனித்து வந்தார் விஜயபாஸ்கர்.

TN Minsiter Vijayabaskar's assets Seized by IT officials

வாக்காளர்களுக்கு ரூ4,000 பணம் லஞ்சமாக கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இச்சோதனையின் போது ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் சிக்கின. இதனைத் தொடர்ந்து விஜயபாஸ்கர், அவரது மனைவி, மற்றும் தந்தை ஆகியோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பதிவாளருக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், திருவேங்கைவாசல் குவாரி உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜயபாஸ்கர் சொத்துகளை முடக்கி புதுக்கோட்டை நில ஆய்வாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income Tax Officials seized the assets of TamilNadu Minister Vijaya Baskar.
Please Wait while comments are loading...