For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கையடக்க செயற்கைக்கோள் உருவாக்கிய சாதனை மாணவன் ரிஃபாத் ஷாரூக்கிற்கு வேல்முருகன் பாராட்டு!

இளம் வயதிலேயே உலகம் திரும்பிப் பார்க்கும் அறிவியலாளராக அறிமுகமாகியுள்ள 'கலாம் சாட்' வடிவமைப்பாளர் ரிஃபாத் ஷாருக்கிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: கையடக்க செயற்கைகோளை கண்டுபிடித்த ரிஃபாத் ஷாருக்கின் சாதனை உலக அறிவியலாளர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பாராட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவன் ரிஃபாத் ஷாருக் கண்டுபிடித்த கையடக்க செயற்கைகோளான கலாம் சாட் நேற்ற அதிகாலை நாசாவால் விண்ணில் செலுத்தப்பட்டது. மாணவனின் இந்த கண்டுபிடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளதோடு, ரிஃபாத்திற்கு வாழ்த்துகள் குவிகின்றன. ரிஃபாத்திற்கு தமிமுக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் கூறியுள்ளதாவது :

 Tn political leader Velmurugan wishes Rifath Sharook for his achievement

செயற்கைக்கோளில் புரட்சி!அறுபத்தி நாலே கிராமில் கையடக்க கோள்!
புதுமை படைத்த முகமது ரிஃபாத் ஷாரூவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாராட்டு! வாழ்த்து!
பனிரெண்டாம் வகுப்பு படித்த பதினேழு வயது மாணவர் முகமது ரிஃபாத் ஷாரூக். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கையடக்க செயற்கைக்கோள் ஒன்றைப் படைத்து புரட்சி செய்துள்ளார்.

 Tn political leader Velmurugan wishes Rifath Sharook for his achievement

மிக மிகக் குறைந்த அளவு நிறையில் அதாவது 64 கிராமில் அந்த செயற்கைக்கோளை ஷாரூக் வடிவமைத்துள்ளார். "கலாம் சாட்" என்று அதற்கு பெயரிட்டுள்ளார். கற்பனை செய்யவும் கடினமான இந்தக் குறைந்த நிறை செயற்கைக்கோளினை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நாசா விண்வெளி நடுவம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருக்கிறது.

இதன் மூலம் ஓர் இளம் அறிவியலாளராக உலகிற்கு அறிமுகமாகியிருக்கிறார் முகமது ரிஃபாத் ஷாருக். மிகச் சிறு வயதிலேயே அரும்பெரும் சாதனை படைத்த முகமது ரிஃபோத் ஷாரூவைப் பாராட்டி வாழ்த்துகிறோம், என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Tamizhaga Vazhvurimai party leader Velmurugan wishes Rifadh Sharrok for his invention of Kalam Sat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X