நாடா புயல்: சென்னை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, கடலூரில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நாடா புயல் நாளை கடலூர் அருகே கரையைக் கடக்க உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

TN Schools shut due to Cyclone

புயல் எச்சரிக்கையால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் மற்றும் மரக்காணம் ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுவை, காரைக்காலில்...

நாடா புயல் எச்சரிக்கையால் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Due to the Warning of Cyclone NADA Chennai, Kancheepuram, Tiruvallur, Cuddalore, Nagai, Nellai districts had declared 2 day’s leave for schools.
Please Wait while comments are loading...