For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்ற தேர்தல்: பிப்.10ல் முதல் விருப்ப மனு வாங்கும் காங்கிரஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

TNCC issues application form for LS poll on Feb 10
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சத்தியமூர்த்தி பவனில் வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

அதிமுக தொடங்கி, திமுக, தேமுதிக, பாமக என மாநில கட்சிகள் பலவும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று நேர்காணல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி இன்னும் சில தினங்களில் விருப்பமனுக்களை விநியோகிக்க உள்ளது. இது குறித்து மாநில தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுத்தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதிக்கு 5 ஆயிரம் ரூபாயும், மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாயும் விருப்பமனுக்களை பெற பணம் செலுத்த வேண்டும்.

விருப்ப மனுக்கள் இரண்டு நாட்கள் மட்டுமே விற்பனை செய்யபடும் பிப்ரவரி 12ஆம் தேதி பரிசீலனை செய்து பரிந்துரை பட்டியல் கட்சி மேலிடத்துக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு ஞானதேசிகன் கூறியுள்ளார்.

English summary
TamilNadu Congress Committee leader Gnadesikan has announced that application distribution for Tamil Nadu, Puducherry assembly elections will begin on February 10. Partymen who wish to contest can get the application from the head office and have to submit it before 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X