அதிமுக அரசை டிஸ்மிஸ் பண்ணுங்க .. டிராபிக் ராமசாமி முன்வைத்த கோரிக்கைகள் இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊழல் அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி டிராபிக் ராமசாமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் சென்னை பாரிமுனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பாரிமுனையில் உள்ள குறளகம் அருகே வங்கிக்கட்டத்தின் நான்காவது தளத்தில் ஏறி ட்ராபிக் ராமாசாமி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக கொள்ளை ஆட்சியை ஒழக்க வேண்டும் என ஆவேசமாக கூறிய அவர் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தார். அவை,

Traffic Ramasamy was demanding to dissolve the Tamilnadu govt

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரை விடுதலை செய்ய வேண்டும்.

ஊழல் அரசியல்வாதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக கொள்ளை ஆட்சியை கலைக்க வேண்டும் என்பனவாகும்.

இதையடுத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு டிராபிக் ராமசாமியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Social activist traffic Ramasamy involved in a suicide attempt in Chennai paris. He was demanding to dissolve the Tamilnadu govt.
Please Wait while comments are loading...