For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை முதல் 4 நாட்களுக்கு தென்மாவட்ட ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: செங்கல்பட்டு அருகே ஒட்டிவாக்கத்தில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால், செப்டம்பர் 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் தென்மாவட்ட ரயில்களின் வருகை, புறப்பாடு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

14-ம் தேதி

14-ம் தேதி

மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் 110 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, சென்னைக்கு 2 மணி நேரம் தாமதமாக வந்தடையும். சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ், செங்கல்பட்டில் 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

பல்லவன் எக்ஸ்பிரஸ்

பல்லவன் எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து பகல் 3.45 மணிக்குப் புறப்படும் சென்னை -காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்படும். ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை எழும்பூரில் இருந்து பகல் 11.10 மணிக்குப் புறப்படும் லோக்மான்ய திலக் காரைக்கால் வாராந்திர எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 230 நிமிடங்கள் நின்று செல்லும்.

மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்

மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்

மும்பை சி.எஸ்.டி. - நாகர்கோவில் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 110 நிமிடங்கள் நின்று செல்லும். திருச்சி சென்னை எக்ஸ்பிரஸ், எழும்பூருக்கு 105 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும். நாகர்கோவில் - மும்பை சிஎஸ்டி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் கருங்குழியில் அரை மணி நேரமும், ஒட்டிவாக்கத்தில் 40 நிமிடங்களும் நின்று செல்லும்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 35 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் அரை மணி நேரம் நின்று செல்லும்.

மேல்மருவத்தூர் ரயில்

மேல்மருவத்தூர் ரயில்

சென்னை கடற்கரை - மேல் மருவத்தூர் - சென்னை கடற்கரை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு மேல்மருவத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத்தூர் - விழுப்புரம் - மேல்மருவத்தூர் பயணிகள் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன. சென்னை எழும்பூர் - புதுச்சேரி - சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

15-ம் தேதி

15-ம் தேதி

மதுரை சென்னை - வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் நிறுத் தப்பட்டு, எழும்பூருக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தடையும். சென்னை - காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ், இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்படும். திருச்சி - சென்னை எக்ஸ்பிரஸ் 150 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.

சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 110 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 65 நிமிடங்கள் நின்றுசெல்லும். சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் அரை மணி நேரம் நின்று செல்லும்.

ரத்து செய்யப்படும் ரயில்கள்

ரத்து செய்யப்படும் ரயில்கள்

சென்னை எழும்பூர் - புதுச்சேரி - சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகின்றன. திருப்பதி - புதுச்சேரி திருப்பதி பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகின்றன. விழுப்புரம் - தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில்கள் முழுதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

16,17-ஆம் தேதிகள்

16,17-ஆம் தேதிகள்

மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஒட்டிவாக்கத்தில் 160 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, எழும்பூருக்கு 170 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும். சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 105 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை - காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் 135 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.

16-ம் தேதி பகல் 2.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் டெல்லி - புதுச்சேரி வாரந்திர எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும்.

திருச்செந்தூர் – ரமேஸ்வரம்

திருச்செந்தூர் – ரமேஸ்வரம்

சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 75 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 40 நிமிடங்கள் நின்று செல்லும். சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் 20 நிமிடங்கள் நின்று செல்லும். புதுச்சேரி - திருப்பதி பயணிகள் ரயில் ஒட்டிவாக்கத்தில் 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர் சென்னை பயணிகள் ரயில்கள் செங்கல்பட்டு மேல்மருவத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத்தூர் விழுப்புரம் மேல்மருவத்தூர் பயணிகள் ரயில்களும், விழுப்புரம் தாம்பரம் விழுப்புரம் பயணிகள் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

English summary
The Southern Railway has announced changes in the arrival and departure of trains to and from Chennai Egmore from September 14 to 17 due to power block to facilitate engineering works at Ottivakkam yard near Chengalpattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X