ஓபிஎஸ் துரோகி என்பதாலேயே தேவரின் தங்க கவசத்தை தரக் கூடாது என எதிர்ப்பு: தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ. பன்னீர் செல்வம் ஒரு துரோகி என்றும் அதனால்தான் தேவரின் தங்கக் கவசத்தை அவரிடம் கொடுக்கக் கூடாது என்றும் அளிக்கக் கூடாது என்று கூறியதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

TTV Dinakaran paid Floral tributes to Maruthu brothers

செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் என்று கூறினார். ஓபிஎஸ் ஒரு துரோகி, எனவேதான் அவரிடம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்தை ஒப்படைக்கக் கூடாது என வங்கிக்கு கடிதம் கொடுத்தோம்.

தேவரின் நினைவாலய நிர்வாகிகளிடம் தங்கக் கவசத்தை ஒப்படைக்குமாறு கடிதம் கொடுத்தோம் என்று கூறினார்.

ஆர்கே.நகர் தேர்தலில் அதிமுகவின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் கூடி வேட்பாளர் அறிவிக்கப்படுவார். ஏற்கனவே தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார் தினகரன்.

கடைசி நேரத்தில் தினகரன் கொடுத்த கடிதம் காரணமாகவே பல மணிநேர வாக்குவாதத்திற்குப் பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் தங்கக் கவசத்தை ஒப்படைத்தது வங்கி நிர்வாகம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran paid homage to freedom fighters Maruthu Pandiyar brothers – Periya Maruthu and Chinna Maruthu at Kalaiyar Koil.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற