அக். 17க்குள் இணைப்பு சாத்தியம்.. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கும் நானே தலைமை: டிடிவி தினகரன் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்.17க்குள் அதிமுக அணிகள் இணையலாம் என்றும், அவ்வாறு இணைந்தாலும் தனது தலைமையில்தான் அதிமுக இயங்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் தினகரன் இன்று இரவு அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுக அணிகள் நாளையே கூட இணையலாம். அக்.17-க்குள் அதிமுக அணிகள் இணையலாம் என எதிர்பார்க்கிறேன். அணிகள் இணைந்தால் கூட என்னுடைய தலைமையில்தான் கட்சி செயல்படும். விரைவில் அமைச்சர்கள் அச்சம் விலகி இணைவார்கள் என நம்புகிறேன்.

TTV Dinakaran says he only will lead AIADMK

காலம் வரும் போது அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதில் சொல்வேன். மீனவர்பிரிவு செயலாளர் மட்டுமே ஜெயக்குமார், அந்த பதவியில் அவரை நியமித்தது சசிகலாதான்.
சசிகலா கைகாட்டியதால்தான் அரசாங்கமே நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நான் செல்வதை யாரும் தடுக்க முடியாது

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran says he only will lead AIADMK even after the merger.
Please Wait while comments are loading...