ஒரே ஒரு எம்.எல்.ஏ. கூட நமக்கு ஆதரவாக இல்லையே... விரக்தியில் தினகரன் குடும்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நிலையில் தமக்கு ஆதரவாக ஒரு எம்.எல்.ஏ. கூட வரவில்லையே என விரக்தியில் இருக்கிறது தினகரன் குடும்பம்.

அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களைப் பொறுத்தவரை இனி ஜென்மத்துக்கும் ஆட்சியில் அமர முடியாது; இப்போதைய ஆட்சிக் காலத்தை பயன்படுத்தி அறுவடை செய்துவிட்டாலே போதும் என்பதுதான் கணக்கு. இதற்காகவே கூவத்தூர் சிறைவாசத்தையும் அடிமைகளாகவே ஏற்றுக் கொண்டனர்.

சட்டசபையில் மனசாட்சியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மன்னார்குடி சசிகலா குடும்பம் எனும் எஜமானர்களைப் பற்றியே சிந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். சசிகலா சிறைக்கு போக நேர்ந்தபோது மவுனியாக மட்டுமே இருந்தவர்கள் தினகரனுக்கும் வால்பிடித்து வலம் வந்தனர்.

எந்த நேரத்திலும் கைது

எந்த நேரத்திலும் கைது

இப்போது காட்சிகளும் கோலங்களும் மாறிவிட்டன... டிடிவி தினகரனுக்கு எதிராக நாலாபுறமும் வழக்குகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன.. இதில் உச்சகட்டமாக இந்திய வரலாற்றிலேயே தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்படும் நிலையில் இருக்கிறார் தினகரன்.

கிரேட் எஸ்கேப்

கிரேட் எஸ்கேப்

இன்னொருபுறம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாஜி முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவின் 'பெருந்தலைகள்' பலரது ஊழல் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு இப்படித்தான் நடந்தாக வேண்டும் என வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறது பாஜக. இந்த ஆடுபுலி ஆட்டத்தில் சிக்கிக் கொண்ட அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக தினகரனை கை கழுவிட்டனர்.

ட்விட்டரில் விடை

ட்விட்டரில் விடை

தினகரனுக்காக கூப்பாடு போட்ட வெற்றிவேலும் தங்க தமிழ்ச் செல்வனும்கூட ஸ்ருதியை குறைத்துக் கொண்டு அடங்கிப் போய்விட்டனர். இப்போது.... ஜேஜேவென எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் புடைசூழ வலம் வந்த டிடிவி தினகரன் அடியாட்களை மட்டும் வைத்துக் கொண்டு தனிமரமாக அதுவும் ட்விட்டரில் விடை பெற்றுப் போய்விட்டார்.

ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லையே

ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லையே

ஒரே ஒரு எம்.எல்.ஏ. கூட தினகரனுக்காக குமுறி அழவோ குய்யோ முறையோ என கூப்பாடு போட கூட தயாராக இல்லை... தமக்கு ஆதரவாக ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லையே என்ற இந்த விரக்தியின் உச்சத்தில்தான் தினகரன், அதிமுகவில் இனியும் நமக்கு மரியாதை இல்லை... என்ற முடிவுக்கு வந்து தப்பி ஓடிவிட்டாராம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran was shocked over the ADMK MLA's sudden revolt against him.
Please Wait while comments are loading...