பேச்சுமன்னன், டெங்கு கொசு, ஊருக்குள் போனால் கோமணத்துடன்தான் வரமுடியும்.. அமைச்சரை விளாசிய தினகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அதிமுக அமைச்சர்களை வச்சு செய்யும் டிடிவி- வீடியோ

  சென்னை: டிடிவி தினகரன் அமைச்சர் ஜெயக்குமாரை சரமாரியாக விளாசியுள்ளார். ஜெயக்குமாரை பேச்சுமன்னன் டெங்கு கொசு என வசைபாடிய தினகரன் அவர் ஊருக்குள் போனால் கோமணத்துடன் வரவேண்டும் என்றும் சாடினார்.

  ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார்.

  இன்றும் சட்டசபைக்கு சென்ற அவர் தம் மீதான விமர்சனத்துக்கு பதில் அளிக்க அனுமதி மறுக்கப்பட்டது என கூறி சட்டசபை வளாகத்தில் டிடிவி.தினகரன் பேட்டியளித்தார். அப்போது தன்னை சட்டசபையில் பேசவிடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார்.

  தோல்விக்கு காரணம்

  தோல்விக்கு காரணம்

  மேலும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களையும் தன்பாட்டுக்கு விளாசினார் தினகரன். மதுசூதனனை மிகப்பெரிய ஃபிராடு என்ற அவர் ஆர்கே நகரில் அதிமுக தோல்வியடைய அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதுதான் காரணம் என்றும் அவர் கூறினார்.

  டெங்குகொசு, பேச்சுமன்னன்

  டெங்குகொசு, பேச்சுமன்னன்

  மேலும் அமைச்சர் ஜெயக்குமாரையும் விட்டு வைக்கவில்லை தினகரன். ஜெயக்குமாரை டெங்கு கொசு, பேச்சு மன்னன் என்றெல்லாம் கிண்டலடித்தார்.

  கோமணத்துடன்தன் வரனும்

  கோமணத்துடன்தன் வரனும்

  ஜெயக்குமார் ஊருக்குள் போனால் கோமணத்துடன்தான் வரவேண்டும் என்றும் தினகரன் கூறினார். மேலும் ஜெயக்குமாரின் சமூகத்தை சேர்ந்தவர்களே அவரை உதைப்பார்கள் என்றும் தினகரன் தெரிவித்தார்.

  துரோகிகள் கையில் சின்னம்

  துரோகிகள் கையில் சின்னம்

  எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் துரோகத்தின் எம்பலம் என்றும் அவர் கூறினார். துரோகிகள் கையில் சின்னம் இருந்தால் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

  பொண்டாட்டி பிள்ளையை கூட..

  பொண்டாட்டி பிள்ளையை கூட..

  ஆர்கே நகரில் 6000 ரூபாய் கொடுத்த புண்ணியத்தில் டெபாசிட் வாங்கினார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய நடிகர்கள் என்றும் பதவிக்காக பொண்டாட்டி பிள்ளையை கூட இல்லை என கூறுவார்கள் என்றும் சாடினார் டிடிவி தினகரன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran slams Minister Jayakumar. He says Minister Jayakumar as Dengue mosquito,king of speech. And also he says Chief minister Edappadi palanisami and OPS are the good actors.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற