18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுப்பு... தினகரன் வெளிநடப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சட்டப்பேரவையிலிந்து டிடிவி வெளிநடப்பு- வீடியோ

  சென்னை: கொறடா உத்தரவை மீறியதாக 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டிடிவி தினகரன். இந்நிலையில் கடந்த வாரம் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்ட நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

  அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதே கருத்தை தினகரனும் செய்தியாளர்களிடம் கூறினார்.

  முதல் கூட்டம்

  முதல் கூட்டம்

  சட்டசபை கூட்டத்தொடர் முதல் நாள் என்பதால் அங்கு உட்கார வேண்டியதாயிற்று என்றும் அவர் தெரிவித்தார். அத்தனை எம்எல்ஏக்கள் இருந்தாலும் அனைவரின் பார்வையும் தினகரன் மீதுதான் இருந்தது.

  18 எம்எல்ஏக்கள் குறித்து...

  18 எம்எல்ஏக்கள் குறித்து...

  இந்நிலையில் இன்று சட்டசபையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. குறித்து தினகரன் எழுப்பினார். அதற்கு அவருக்கு பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.

  செய்தியாளர்களிடம் பேட்டி

  செய்தியாளர்களிடம் பேட்டி

  இதையடுத்து தினகரன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்துவிட்டு வெளியே வந்துவிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்க அனுமதி கேட்டேன். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

  18 எம்எல்ஏக்களின் தொகுதி காலி

  18 எம்எல்ஏக்களின் தொகுதி காலி

  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் 18 எம்எல்ஏக்களின் தொகுதிகள் காலியானதாக தமிழக அரசு இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினருடன்
  நட்புடன் பேசுவது தவறா. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நியாயமானதுதான்.

  எடப்பாடிக்கு தகுதி இல்லை

  எடப்பாடிக்கு தகுதி இல்லை

  முதல்வராக இருக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதி இல்லை. எதிர்க்கட்சியினருடன் பேசினால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பயப்படுகிறார்கள் என்றார் தினகரன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran walks out from assembly as he was not given chance to raise about 18 MLAs disqualification case.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற