For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டுக்கு நல்லது செய்ய உஜாலா: அரசின் புது முயற்சி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்திக் கொண்டே மின்சார தயாரிப்பில் ஈடுபடுவது இந்தியாவுக்கு சவாலாக உள்ளது. மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

உன்னத் ஜீவனின் எல்இடிக்கள் மற்றும் அப்ளையன்ஸ்கள்(உஜாலா)(Unnat Jeevan by Affordable LEDs and Appliances(UJALA)) திட்டம் மூலம் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் பொருட்களை அரசு நாடு முழுவதும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது.

UJALA: Promoting use of energy efficient products?

தற்போது எல்இடி விளக்குகள், டியூப்லைட்டுகள் மற்றும் மின்விசிறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

உஜாலாவின் பயன்கள்?

உஜாலா திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் பொருட்களால் மின்சாரம் மிச்சமாகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டணம் குறைகிறது, நாட்டிற்கு மின்சாரம் மிச்சமாகிறது.

நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்கள் மூலம் தான் நாட்டின் மின்சாரத் தேவையில் பெரும்பகுதி பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலையங்களில் வெளியாகும் கரியமிலவாயுவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. உஜாலா திட்ட பொருட்களால் மின் தேவை குறைந்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும்.

எல்இடி விளக்குகள், டியப்லைட்டுகளின் விலை முன்பு அதிகமாக இருந்ததால் மக்கள் அதை வாங்கவில்லை. தற்போது அவற்றை மானிய விலையில் வழங்குகிறது அரசு.

பச்சத் லேம்ப் யோஜனா(பிஎல்ஒய்)

முன்னதாக பச்சத் லேம்ப் யோஜனா(பிஎல்ஒய்) திட்டத்தின்கீழ் குறைந்த விலையில் சிஎப்எல் விளக்குகளை மக்களுக்கு அளித்து வந்தது அரசு. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உஜாலா திட்டம் பிஎல்ஒய் திட்டத்தை விட பெரிய அளவில் வெற்றி அடையும் என்று நம்பப்படுகிறது.

விளக்குகள்

தற்போது வரை நாடு முழுவதும் 23.5 கோடி எல்இடி விளக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் 2.4 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைந்துள்ளது. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் எல்இடி டியூப்லைட்டுகள் மற்றும் மின்விசிறிகள் விற்பனை நடக்கவில்லை.

உஜாலா திட்டம் மூலம் 21 லட்சம் டியூப்லைட்டுகள், 8 லட்சத்திற்கும் அதிகமான மின்விசிறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஃபை ஸ்டார் ரேட்டட் பொருட்கள் ரூ. 1,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உஜாலா திட்டம் மூலம் அரசு மேலும் பல பொருட்களை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

English summary
India faces a stiff challenge of building an adequate power generation capacity while addressing environment concerns. It becomes imperative for the country to promote energy conservation and use of energy efficient electronic products as it would reduce power consumption and lower the pressure for capacity expansion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X