சென்னையில் கர்நாடக அரசுப் பேருந்து மீது கல்வீச்சு.. பதற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

  போராட்டத்தில் ஈடுபடுவர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - அமைச்சர் விஜய பாஸ்கர்- வீடியோ

  சென்னை: கர்நாடக அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

  அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

  Unidentified persons throwing stones on the buses including chennai in many where

  பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிற்சங்கத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோயம்பேடு நோக்கி வந்த கர்நாடக அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  இதேபோல் சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் மாநகர பேருந்தின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

  பேருந்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே வேலூரில் இருந்து திருப்பதி சென்ற பேருந்து மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இயக்கப்படும் பேருந்துகள் மீது தொடர்ந்து கல்வீச்சு நடத்தப்படுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Unidentified persons throwing stones on the buses including chennai in many where. Karnataka govt bus damaged due to stone pelting. Transport trade unions conducts strike against government.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற