For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எண்ணெய் கசிவு: சென்னை மிகப்பெரிய சூழலியல் பேரிடரை எதிர்கொள்ளும் ஆபத்து- அன்புமணி

கச்சா எண்ணெய் கடல் பரப்பில் பரவுவது கட்டுப்படுத்தப்படாததால், சென்னை மிகப்பெரிய சூழலியல் பேரிடரை எதிர்கொள்ளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று பாமக எம்.பி அன்புமணி எச்சரித்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கச்சா எண்ணெய் கசிவை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக தண்ணீர் எடுக்கப்படும் பகுதிகளில் கச்சா எண்ணெய் கசிவு பரவினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சென்னை மாநகர மக்களின் உடல் நலத்தை அது கடுமையாக பாதிக்கும் என்றும் பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகில் இரு கப்பல்கள் மோதிக் கொண்டதால் வங்கக் கடலில் ஏற்பட்ட கச்சா எண்ணெய்க் கசிவு எட்டு நாட்களாகியும் இன்னும் அகற்றப்படவில்லை.

அதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் கடல் பரப்பில் பரவுவதும் கட்டுப்படுத்தப்படாததால், சென்னை மிகப்பெரிய சூழலியல் பேரிடரை எதிர்கொள்ளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

கப்பல் விபத்து

கப்பல் விபத்து

கப்பல் விபத்துக்களின் காரணமாகவோ, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களில் வெடிப்பு ஏற்படுவதாலோ கடலில் கச்சா எண்ணெய் கசிந்தால் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எண்ணெய் தொழில்துறை பாதுகாப்பு இயக்குனரகம் வகுத்துள்ளது.

எண்ணெய் கசிவு அலட்சியம்

எண்ணெய் கசிவு அலட்சியம்

அதன்படி, கச்சா எண்ணெய் கடல் பரப்பில் பரவுவதை தடுக்க குறிப்பிட்ட சுற்றளவில் பூம்கள் எனப்படும் தடுப்பான்களை அமைக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட பரப்பில் மட்டும் தேங்கி நிற்கும் எண்ணெய்க் கசிவை ஸ்கிம்மர்கள் எனப்படும் பிரித்து அகற்றும் கருவிகள் மூலம் அகற்றுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஆனால், இதை செய்ய எண்ணூர் துறைமுக நிர்வாகம் தவறிவிட்டது.

எண்ணெய் மாசு

எண்ணெய் மாசு

கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதுமே, அதை சமாளிப்பதற்கான திறன் கொண்ட எண்ணெய் தொழில் பாதுகாப்பு இயக்குனரகம், கடலோரக் காவல்படை, கடற்படை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத துறைமுக நிர்வாகம், வங்கக் கடலில் எண்ணெய் மாசு உள்ளிட்ட எந்த பாதிப்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டது.

மத்திய அமைச்சர் அறிக்கை

மத்திய அமைச்சர் அறிக்கை

அதற்கு அடுத்த நாள் துறைமுகத்தைப் பார்வையிட்ட மத்திய அமைச்சரும் கச்சா எண்ணெய் கசிவால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார். இதனால் விபத்து நடந்து 2 நாட்கள் வரை கச்சா எண்ணெயை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை. நிலைமை இவ்வளவு மோசமானதற்கு இவை தான் காரணமாகும்.

அவசர கால மீட்பு

அவசர கால மீட்பு

சென்னையில் அடுத்தடுத்து 3 துறைமுகங்கள் உள்ள நிலையில், இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்து அவசரகால மீட்புத் திட்டங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதுகுறித்த அடிப்படை புரிதல் கூட துறைமுகங்களுக்கு இல்லை.

கச்சா எண்ணெய் கசிவை அகற்றும் பணியில் கடலோரக் காவல்படையினர் அவர்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் அவர்கள் செய்து வரும் பணி பாராட்டத்தக்கதாகும்.

மக்களுக்கு பாதிப்பு

மக்களுக்கு பாதிப்பு

இதுவரை 50 டன் எண்ணெய்க் கழிவுகளும், 30 டன் எண்ணெய்க் கலவைகளும் அகற்றப்பட்டிருக்கும் போதிலும், கச்சா எண்ணெய் கசிவு பரவி வருகிறது. காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் கசிவு பரவலின் வேகமும் அதிகரிக்கும்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக தண்ணீர் எடுக்கப்படும் பகுதிகளில் கச்சா எண்ணெய் கசிவு பரவினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சென்னை மாநகர மக்களின் உடல் நலத்தை அது கடுமையாக பாதிக்கும்.

நவீன தொழில் நுட்பம்

நவீன தொழில் நுட்பம்

எனவே, கச்சா எண்ணெய் கசிவை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக இப்போது கடைபிடிக்கப்படும் முறையை தொடர்ந்தால், கசிவுகளை அகற்ற இன்னும் வெகுகாலம் பிடிக்கும். கடலில் கச்சா எண்ணெய் கசிவை அகற்றும் தொழில்நுட்பத்தில் வல்லமை பெற்ற அமெரிக்காவின் டெலவர் பல்கலைக்கழகம் இதற்கானத் திட்டங்களை ஏற்கனவே வகுத்திருக்கிறது.

நச்சுத்தன்மை

நச்சுத்தன்மை

கழிவகற்றும் தன்மை கொண்ட வேதிப்பொருட்களை கச்சா எண்ணெய் கசிவுகள் மீது வீசுவதன் மூலம், அவை பரவும் வேகம் குறைவதுடன் வேதிவினைக்கு உள்ளாகி மக்கி தண்ணீருடன் கலந்து விடும். அதனால் எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல், பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை விடுவதன் மூலம் கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்ற முடியும்.

மேலும், எண்ணெய் கசிவை தடுக்கும் பூம் தடுப்பான்களை பொருத்தி, தண்ணீரையும், எண்ணெயையும் பிரித்து அகற்றும் ஸ்கிம்மர் கருவி மூலம் கடலை சுத்தப்படுத்த முடியும். இந்நவீன உத்திகளை பயன்படுத்த அரசும், துறைமுகமும் முன்வர வேண்டும்.

வாழ்வாதாரம் பாதிப்பு

வாழ்வாதாரம் பாதிப்பு

இவை ஒருபுறமிருக்க கச்சா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட சூழலியல் மற்றும் வாழ்வாதார பாதிப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடந்த 8 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில், இன்னும் 10 நாட்களுக்கு கடலுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. இதை கருத்தில் கொண்டு அனைத்து மீனவர்களுக்கும் வாழ்வாதார உதவி வழங்கப்பட வேண்டும்.

வழக்குப்பதிவு தேவை

வழக்குப்பதிவு தேவை

பங்கர் உடன்பாடு எனப்படும் பன்னாட்டு கடல்சார் அமைப்பு உடன்படிக்கையில், இதுபோன்ற நிகழ்வுகளில் கச்சா எண்ணெய் கசிவுக்கு யார் காரணமோ, அவர்களிடம் தான் இழப்பீடு பெற வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் இதற்கான இழப்பீடை இரு கப்பல் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். அத்துடன், கப்பல் நிறுவனங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 280, 336 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK youth wing leader Anbumani Ramadoss complained that the oil spill had not been removed in eight days and it is spreading far into other parts of the state coast. He also charged the Ennore port authorities with failing to set up booms, an obstruction to prevent spread of oil spill and later skimmers could have been used to clean it easily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X