For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணியை வழி நடத்தப் போகும் வைகோ.. சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை?

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும், தேமுதிகவின் ஒருங்கிணைப்பாளராகவும் டபுள் போஸ்ட்டிங்கைப் பெற்றுள்ள வைகோ, வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் போட்டியிட மாட்டார் என்கிறார்கள். திருமாவளவன் மற்றும் முத்தரசன் ஆகியோர் மட்டும் போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது.

சட்டசபைத் தேர்தலில் தனது அணியின் முழு வெற்றியை உறுதி செய்யும் வகையில் தீவிரப் பிரசாரம், வழிகாட்டல், திட்டமிடல் என கவனம் செலுத்தப் போகிறாராம் வைகோ. அவருக்குத் துணையாக ஜி.ராமகிருஷ்ணன் செயல்படப் போகிறாராம்.

முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்

முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்

தங்களை விட பல வகையிலும் ஜூனியரான விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து களம் இறங்கியுள்ளனர் மக்கள் நலக் கூட்டணியினர்.

பிரமாண்டக் கூட்டம்

பிரமாண்டக் கூட்டம்

அடுத்து பிரமாண்ட பொதுக் கூட்டம் போடவுள்ளனர். சென்னையில் அடுத்த மாதம் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் வைகோ

ஒருங்கிணைப்பாளர் வைகோ

இந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ செயல்படுகிறார். எனவே அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம்.

ஜி.ரா போட்டியிட ரைட்ஸ் இல்லை

ஜி.ரா போட்டியிட ரைட்ஸ் இல்லை

அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் போட்டியிடக் கூடாதாம். எனவே அவரும் போட்டியிட மாட்டாராம்.

தீவிரப் பிரசாரம்

தீவிரப் பிரசாரம்

தேர்தல் பிரசாரத்தில் வைகோ தீவிரமாக ஈடுபடவுள்ளாராம். இவரது பேச்சுக்குத்தான் வெயிட் இருக்கும் என்பதால் முழு அளவில் 234 தொகுதிகளுக்கும் வைகோ பிரசாரம் செய்யப் போவார் என்று கூறப்படுகிறது.

English summary
PWF leader Vaiko may not contest in Assembly election due to his commitments in the alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X