For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிகாரர்களால் பிஞ்சுக் குழந்தைகளும் சீரழிக்கப்படுகிறார்கள், இழுத்து மூடுங்கள் மதுக் கடைகளை.. வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்களை காப்பாற்ற, மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, நிரந்தரமாக மதுக்கடைகளை மூடவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை அகற்றக்கோரி பல்வேறு இடங்களில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராடிக்கொண்டிருக்கின்ற செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டிருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தான் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

Vaiko reiterates demand for total ban on liquor in Tamil Nadu

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு அனைத்துக்கும் மதுதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. நெஞ்சைப் பிளக்கும் வகையில், 5 வயது, 6 வயது சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள்கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன.

ஈரோடு அருகே பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவிகள் டாஸ்மாக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி கவலை அடையச் செய்கிறது. மதுக்கடைகள் இருக்கும் பகுதியில் பெண்கள் சென்று வரவே அச்சப்படுகிற நிலைமை இருப்பதால், பொதுமக்களின் போராட்டங்கள் வெடிக்கின்றன.

டாஸ்மாக் நிறுவனம் மூலம் அதன் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவே கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி 25-ல், சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பில், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மார்ச் 31-குள் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. நெடுஞ்சாலைகளில் இருக்கும் 504 மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் பேராபத்தை தடுப்பதற்காகத்தான் மதுக்கடைகளை மூட வலிறுத்தி, 1,200 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டேன். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள் அழுகையும், கண்ணீருமாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கதறி அழுத காட்சிகள் நெஞ்சை உருக்குகின்றன.

பேரழிவிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பும் கடமையும் தமிழ்ச் சமுகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இருக்கிறது. மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, நிரந்தரமாக மதுக்கடைகளை மூடுவதுதான் தமிழ்நாட்டை காப்பாற்ற ஒரே வழி என்றும் வைகோ கூறியுள்ளார்.

English summary
The entire nation is talking about the gruesome crimes against women, but the fact that the perpetrators in almost all cases are drunk is being forgotten, said MDMK leader Vaiko.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X