உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது.. குரங்கணி விபத்து பற்றி வைரமுத்து வருத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: குரங்கணி விபத்து காரணமாக உயிர் வலிக்கிறது, ஊரே அழுகிறது என்று வைரமுத்து வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.

Vairamuthu feels bad about Theni Forest Fire

இந்தவிபத்தில் இது வரை 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தேனி காட்டு தீ குறித்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். தற்போது கவிஞர் வைரமுத்து டிவிட் செய்துள்ளார்.

அதில் ''உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள்மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன்.'' என்றுள்ளார்.

மேலும் '"சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ" என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன்.'' என்றுள்ளார்.

மேலும் ''இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vairamuthu feels bad about Theni Forest Fire. He tweets about the issue and moan on this.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற