For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஷ்பு வீட்டை முற்றுகையிட்டுவோம்.... வீரலட்சுமி எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழர் பண்பாடு, நாகரீகம் வாழ்வியல் நெறி, அவற்றின் தொன்மை ஆகியவற்றை சிதைக்கும் வகையில் பேசி வரும் நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கி.வீரலட்சுமி என்பவர் தலைமையிலான தமிழர் முன்னேற்ற படை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ் இனத்தின் விடுதலை போரட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலு ஒட்டு மொத்த தமிழர்களை அவமானப்படுத்தும் வகைளும் தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழ் மண்ணுக்கும் எந்த வித உழைப்பும் தியாகமும் செயயாமல் பிழைக்க வந்த வெளிமாநில பெண்ணான சினிமா கவர்ச்சி நடிகை குஷ்பு, தமிழ் தமிழர் வரலாறு கடுகளவும் தெரிந்துகொள்ளாமல் ஈழ விடுதலை போராளிகளை தீவிரவாத இயக்கம் என்று கூறியிருக்கிறார்.

Veeralakshmi warns Kushboo

இது கடும் கண்டனத்திற்கு உரியது. உலக தமிழர்களை மிகுந்த மனவேதனை ஏற்படுத்தியிருக்கிறார். ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைபுலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என்று கூறி அவற்றின் மீதான தடையை அண்மையில் நீக்கயுள்ளது. இந்தியாவிலும் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த வேளையில் சினிமா கவர்ச்சி நடிகை குஷ்பு ஈழ விடுதலை போராளிகளை தீவிரவாதிகள் என்று அரசியல் ஆதாயத்திற்காக கூறுகிறார். இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டதற்கு பகிரங்க மனிப்பு கோரவேண்டும்.

மேலும் சென்னை ஐ ஐ டி யில் மாணவர்கள் முத்தப் போராட்டம் என்ற பெயரில் நமது தமிழ் பண்பாட்டை சீர் அழிக்கிறார்கள். இதற்கு ஆதரவாக அவர் அறிக்கையும் விடுகிறார். தமிழர் பண்பாடு, நாகரீகம், வாழ்வியல் நெறி, அவற்றின் தொன்மை ஆகியவற்றை சிதைக்கும் வகையில் பேசி வருகிறார்.

இதை வன்மையாக தமிழர் முன்னேற்ற படை கண்டிக்கிறது. குஷ்பு மன்னிப்பு கோராவிடில் குஷ்பு வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

English summary
Tamilar Munnetra Padai founder K Veeralakshmi has warned actress Kushboo and annonuced a siege protest against the actress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X