For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Exclusive: முதல்வர் வேட்பாளர் விவகாரம்- வைகோ கமெண்ட்டால் கண்கள் சிவந்த விஜயகாந்த்!

மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த்தை அறிவித்தது தப்பு என வைகோ பேசிய விவகாரம் தேமுதிகவில் சூட்டை கிளப்பியுள்ளது.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: மதிமுக தலைவரும் மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ மீது தேமுதிக கட்சியினரும், அதன் தலைவர் விஜயகாந்த்தும் கடும் அதிருப்தியிலுள்ளனராம்.

மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது தவறு என்கிற தொணியில் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார் வைகோ. ம.ந.கூ.வின் தேர்தல் தோல்விக்கு முதல்வர் வேட்பாளர்தான் காரணம் என்பதாகவே அமைந்திருந்தது வைகோவின் கருத்து. இந்த கருத்து, தேமுதிக வட்டாரத்தில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைகோவின் பேட்டி விஜயகாந்தை காயப்படுத்தியிருக்கிறது என்றும் விஜயகாந்த் மற்றும் சுதீசிடம் இது பற்றி காரசாரமாக பிரேமலதா பேசியுள்ளார் என்றும் விஜயகாந்த் குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசிங்கப்படுத்திவிட்டாரே வைகோ

அசிங்கப்படுத்திவிட்டாரே வைகோ

"கேப்டனை இந்தளவுக்கு வைகோ கேவலப்படுத்தியிருக்க கூடாதென்று" கட்சி நிர்வாகிகளிடமிருந்து பிரேமலதாவுக்கு வந்த போன் கால்களைத் தொடர்ந்தே பிரேமலதாவிற்கு கோபம் எகிறியிருக்கிறது. மக்கள் நல கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கச் சொல்லி நாமா வைகோவிடம் கெஞ்சினோம்? நம்மை நாடி வந்த அவர்கள், கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக உங்களை ஏற்க நாங்கள் தயார். திமுக பக்கம் போனா உங்களை கறி வேப்பிலை மாதிரி பயன்படுத்திக்கிட்டு தூக்கியெறிஞ்சிடுவாங்க. ஸ்டாலினுக்கு கீழே உங்களால இருக்க முடியுமா? எங்க கூட்டணிக்கு வாங்க. நீங்க வந்தீங்கன்னா கூட்டணிக்கு 1000 யானை பலம் வந்த மாதிரி. நீங்க எங்கு இருக்கீங்களோ அந்த கூட்டணிதான் ஆளும் கட்சிக்கு போட்டியாக இருக்கும் என கெஞ்சினார்கள், என்று பழைய கதைகளை விஜயகாந்த்திடம் நினைவு கூர்ந்துள்ளார் பிரேமலதா.

நாங்க கெஞ்சவில்லையே

நாங்க கெஞ்சவில்லையே

முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அவர்கள் சம்மதிப்பதால் அது குறித்து கட்சியில் பரிசீலித்தோம். ஏற்றுக்கொண்டோம். ஏதோ, உங்களை முதல்வர் வேட்பாளரா அறிவிக்கச் சொல்லி நாம் கெஞ்சின மாதிரி வைகோ பேசுவது சரியில்லைங்கன்னு விஜயகாந்திடம் சீறியிருக்கிறார் பிரேமலதா. இதே தொனியிலேயே சுதீசும் பேச, காரியம் ஆகணும்னா ஏதேனும் பேசிடுறார். காரியம் முடிஞ்சதும் அவர் சுயரூபத்தை காட்டிடுறார்னு விஜயகாந்த் வருத்தத்தோடு கூறியுள்ளார்.

கூட்டணிக்குள் குழப்பம்

கூட்டணிக்குள் குழப்பம்

அப்போது குறுக்கிட்ட பிரேமலதா, கூட்டணி தோல்விக்கு நாமதான் காரணம்ங்கிற மாதிரி அவர் பேசறது சரியில்லை. கூட்டணி உருவானப்பவே என்ன பேசிக்கிட்டோம். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் போட்டிப்போடணும் அப்பதான் நம்ம கூட்டனியை மக்கள் ஏத்துப்பாங்க; நம்ம மீது நம்பிக்கை வரும் ; கட்சி தொண்டர்களும் ஆர்வமா தேர்தல் வேலைகளைப் பார்ப்பாங்க ; கூட்டணி கட்சி தொண்டர்களிடையே ஒருங்கிணைப்பும் இருக்கும்னு பேசினோம். வைகோதான் இதை முதல்ல ஆமோதிச்சாரு. அதனால்தான் அவரையே ஒருங்கிணைப்பாளரா நியமிச்சோம். தலைவர்கள் போட்டியிடறதுக்கு தோதான தொகுதிகளியும் விட்டுக்கொடுத்தோம். அப்படியிருக்க கடைசி நேரத்தில் போட்டியிடாமல் விலகி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்பத்தியது யாரு? அவர் தானே என காட்டமாக கேட்டாராம்.

வைகோ துரோகம்

வைகோ துரோகம்

வைகோ செய்தது கூட்டணிக்கு செஞ்ச துரோகமில்லையா? அவர் ஏற்படுத்திய குழப்பத்தாலேதானே கட்சிக்காரர்களும் விரக்தியடைந்து சோர்ந்து போனார்கள். மக்களிடம் நெஞ்சை நிமித்தி நம்மாள நம்பிக்கையா நாலு வார்த்தை பேச முடியாம போனதுக்கு அவரோட செயல்தானே காரணம்? கூட்டணி தோத்ததுக்கு அவருடைய நடவடிக்கைகள் உட்பட நிறைய காரணமிருக்கு. அதை விட்டுட்டு முதல்வர் வேட்பாளர்னு காரணம் சொல்றது நம்பிக்கைத் துரோகம் என கடுமையாக பேசியுள்ளார் பிரேமலதா. சமீபகாலமாக நம்பிக்கைக்குரிய தலைவராக வைகோ தெரியமாட்டேங்கிறார்ங்கிறது வருத்தமளிக்கிறது. இந்த வருத்தம் தேமுதிக தொண்டர்களீடமும் பரவியுள்ளது என்று விவரித்தார்கள். விஜயகாந்த் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்.

English summary
Vijayakanth is in upset mood after he came to know about his alliance partner Vaiko's comment on him, sources says to Oneindia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X