வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தராத தமிழக அரசு- விஜயகாந்த் பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாடியுள்ளார்.

சேலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

Vijayakanth slams TN govt on Flood issue

மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரண உதவியையும் தமிழக அரசு வழங்கவில்லை.

சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே மாநகராட்சியால் தாங்க முடியவில்லை. சென்னையில் பலநாட்கள் கனமழை பெய்தால் நிலைமை மேலும் மோசமாகி இருக்கிறது.

தமிழகத்தில் தேமுதிக தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK President Vijayakanth slammed that the TamiNadu Govt on the Flood issue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற