தூத்துக்குடிக்கு கேரள கழிவுகளுடன் வந்த லாரி... அதிரடியாக களம் இறங்கிய பேரூராட்சி நிர்வாகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி : தூத்துக்குடியில் கேரள கழிவுகளுடன் வந்த லாரியை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் மடக்கி பிடித்த அபராதம் விதித்த சம்பவம் அங்கு கழிவுகளை கொண்டு வரும் லாரிகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாமிரபரணி ஆற்றுக்கு கீழ் பகுதி கரையோரத்தில் காட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றை அழகுப்படுத்தும் பணியை கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். கரையோரத்தில் மலை போல் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

 Village administration officers caught a load auto which carries hen wastes and try to dump at Tamirabarani

இதன் பின்னர் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் கொட்டப்பட்டு மங்கும், மங்கா குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாமிரபரணி நதிக்கரையில் கேரள கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்வதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு நிலை இருப்பதாகவும் பொது மக்கள் புகார் கூறினர்.

இதை தொடர்ந்து பேரூராட்சி பணியாளர்கள் தாமிரபரணி ஆற்று பகுதியை தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர். இரவில் கேரளாவில் இருந்து தூத்துக்குடி வழியாக கோழி கழிவுகளை கொட்ட வந்த லோடு ஆட்டோவை பேரூராட்சி செயல் தலைவர் மணிமொழியான் ரெங்கசாமி பறிமுதல் செய்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கோழி கழிவுகளை கொட்ட வந்ததற்காக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Village administration officers caught a load auto which carries hen wastes and try to dump at Tamirabarani, Police fined them a sum of Rs. 50,000.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற