‘நான் பைத்தியம் போல் விளையாடுகிறேன்’.. செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஓய்வு பெற முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் போட்டிகளிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னையை சேர்ந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். சர்வதேச அளவில் செஸ் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இவர், சமீபகாலமாக, போட்டிகளில் எதிர்பாராத வகையில் சரிவை சந்தித்து வருகிறார்.

கடந்த 30 ஆண்டுகாலமாக, செஸ் அரங்கில் உச்சத்தில் இருந்துவரும் விஸ்வநாதன் ஆனந்த், கடந்த 4 ஆண்டுகளாக, தனது மேஜிக்கை நிகழ்த்த முடியாமல், செஸ் போட்டிகளில், மிகவும் திணறி வருகிறார். இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனந்தை திணறடிக்கும் கார்ல்சென்

ஆனந்தை திணறடிக்கும் கார்ல்சென்

இவருக்குப் போட்டியாக உருவெடுத்துள்ள கார்ல்சென், ஆனந்தைவிட அதிகளவு நேர்த்தியாக, தொழில்முறை செஸ் போட்டிகளில் ஆடி வருகிறார். இது, விஸ்வநாதன் ஆனந்தை மிகவும் யோசிக்க வைத்துள்ளது.

ஜொலிக்காத ஆனந்த்

ஜொலிக்காத ஆனந்த்

அவருடன் மோதிய சமீபத்திய போட்டிகளில், ஆனந்தால் பெரிதும் சோபிக்க முடியவில்லை. தன்னைவிட கார்ல்சென் சிறப்பாக விளையாடுவதாக, ஆனந்த் பலமுறை கூறியுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், கிராண்ட் செஸ் டூர் விளையாட்டுப் போட்டிகளில், 18 புள்ளிகளுக்கு, 8 புள்ளிகளை மட்டுமே ஆனந்த் பெற்றுள்ளார். இது ஆனந்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன ஆனது ?

என்ன ஆனது ?

இந்த போட்டிகளின் முடிவாக, செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், நான் ஒரு பைத்தியம் போல விளையாடுகிறேன். எனக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இப்படி விளையாடுவதை நான் விரும்பவில்லை. இந்த அர்த்தமற்ற ஆட்டத்தை நீண்ட நாள் தொடரக்கூடாது என்றே நினைக்கிறேன்,'' எனக் குறிப்பிட்டார்.

ஓய்வு பெற முடிவு

ஓய்வு பெற முடிவு

இதன்மூலமாக, அவர் செஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாகவும், இதன் தாக்கமே, அவரது வார்த்தைகளில் காணப்படுவதாகவும் விளையாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Grand Chess Tour: Viswanathan Anand hints at retirement after eighth-placed finish
Please Wait while comments are loading...