For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏற்காடு தேர்தலில் ஓட்டுப் போட உதவும் 10 ஆவணங்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Voter Slip to be used as ID-card in by election : Election officer
சேலம்: ஏற்காடு தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 10 வகையான ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான மகரபூஷணம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறியுள்ளதாவது:

''ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெறுவதை யொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியானது 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. அதே போன்று புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு வழங்கும் பணியும் 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவிற்கு வரும் வாக்காளர்கள் இந்த இரண்டு ஆவணங்களையும் எடுத்து வந்து தங்களது வாக்கினை பதிவு செய்யலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், வாக்காளர் சீட்டின் தங்களது உருவப்படம் மாறியிருக்கும் பட்சத்தில், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகங்கள், இந்திய வருமான வரித்துறையினரால் வழங்கப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி இந்திய அரசின் தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடையாள அட்டை, தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கப்படும் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியதாரர் அடையாள அட்டை ஆகிய 10 வகையான அடையள அட்டைகளை காட்டி வாக்களிக்கலாம் என அறிவித்துள்ளார்.

English summary
The voter slip would be this time used as id-card during voting and those voters who do not have photographs in the voter list for them alternated cards would be accepted as id-card, the EO said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X