வங்கத்து கடலோரம் துயில் கொண்டும் எங்களை வழி நடத்தும் அம்மா! - சட்டசபையில் கவிதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் ஜெயலலிதா இருந்த போது ஆள் ஆளுக்கு புகழ்ந்து கவிதை வாசிப்பார்கள். அவர் மரணமடைந்த பின்னரும் இப்போது அமைச்சர்கள் அவரை புகழ்ந்து கவிதை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உங்களை மறந்தால் மன்னிக்காது எங்கள் மனசாட்சி! என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டசபையில் கவிதை வாசித்துள்ளார். ஜெயலலிதாவை புகழ்ந்து கவிதை வாசித்தாலே வரிக்கு வரி பெஞ்சை தட்டுவார்கள் அமைச்சர்கள். இந்த முறையை அதிகம் அமைதியே நிலவியது.

We are forget amma.. Dindigul Sreenivasan says in TN assembly

சத்தியமே உருவெடுத்து
சாதனைகளால் சரம் தொடுத்து
சங்கத்தமிழ் பூமியின் செங்கோல் சுமந்து
ஆறுமுறை தமிழகத்தை அரசாட்சி செய்து
ஈடில்லா புரட்சிகள் ஏராளம் நிகழ்த்தி
இந்திய தேசத்தின் மூன்றாம் பெரும் இயக்கம் என்னும் இமயத்துப் புகழால்
தமிழர்தம் இல்லங்களிலும் உள்ளங்களிலும்
நீடித்து வாழ்கிற நிகரில்லா தலைவி!
வங்கத்து கடலோரம் துயில் கொண்டும் எங்கள் வழித்துணை தெய்வம் அம்மாவை வணங்குகிறேன்.
மரக்கன்றுகளை நட உத்தரவிட்ட இயற்கையின் காவலர்!
மாணவர்கள் மடிக்கணினி திறக்கும் போதெல்லாம் அம்மாவின் மதிமுகம் ஜொலிக்கும்!
தாலிக்குத் தங்கம் தந்த தங்கத்தாரகை!
உடலுக்கு நோய் இருந்து ஊறு செய்த போதிலும் கூட
உள்ளத்தின் வலிமை கொண்டு உழைத்திட்ட வேகம்தான் எங்கள் அம்மா!
தாலாட்டு பாடாமல் தாயானவர் எங்கள் அம்மா
இன்று வங்கக் கடல் அலைகள் அம்மாவை குழந்தையாக்கித் தாலாட்டுகின்றன!
அமைதியாய் கண்ணுறங்கும் பொன் மகளே!
மெரினாவின் மண் கூட உங்களை தொடுவதற்கு அஞ்சும்!
மறைந்த பின்னும் மக்களின் மனங்களில் செய்கிறார் அரசாட்சி!
உங்களை மறந்தால் மன்னிக்காது எங்கள் மனசாட்சி!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Dindigul Sreenivasan has song Amma pugazh in Assembly. We are not forget amma said Minister.
Please Wait while comments are loading...