Breaking News: நாங்கள் 3-ஆவது அணி இல்லை... தெலுங்கானா முதல்வர்
Tamilnadu
oi-Vishnupriya
By Lakshmi Priya
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆழ்வார்பேட்டையில் மு.க.ஸ்டாலினுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நாங்கள் 3-ஆவது அணி இல்லை என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து 3-ஆவது அணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முயற்சித்து வருகிறார்.
தமிழகத்தில் பிரதான கட்சியாக திகழும் திமுகவின் ஆதரவை பெறுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு இன்று மதியம் சந்திரசேகர ராவ் வந்தார்.
திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 3-ஆவது அணிக்கு ஆதரவு கேட்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர ராவ் கூறுகையில், 3-ஆவது, 4-ஆவது அணி அமைக்க திட்டம் இல்லை, நாங்கள் 3-ஆவது அணி அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
Apr 29, 2018, 4:50 pm IST
மாநிலங்களுக்கு கூடுதல் நிதி, அதிகாரங்கள் தேவைப்படுவது குறித்து விவாதித்தோம்
Apr 29, 2018, 4:50 pm IST
கல்வி, மருத்துவம், தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்குவதில் மத்திய அரசு சரிவர செயல்பட வில்லை
Apr 29, 2018, 4:50 pm IST
மாநில சுயாட்சி குறித்து ஸ்டாலினிடம் விவாதித்தேன்
Apr 29, 2018, 4:50 pm IST
மத்திய, மாநில அரசு உறவுகள் குறித்து விரிவாக ஸ்டாலினிடம் பேசினேன்
Apr 29, 2018, 4:50 pm IST
3ஆவது, 4ஆவது அணியெல்லாம் அமைக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை
Apr 29, 2018, 4:50 pm IST
2004ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசி உள்ளேன்
Apr 29, 2018, 4:49 pm IST
தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் ஸ்டாலினை சந்தித்த பின் பேட்டி
Apr 29, 2018, 4:49 pm IST
சகோதரர் ஸ்டாலினுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினேன்- சந்திரசேகர ராவ் பேட்டி
Apr 29, 2018, 4:48 pm IST
அம்மா அணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திவாகரன் நியமனம்
Apr 29, 2018, 4:38 pm IST
எதிர்வரும் அரசியல் சூழலை எப்படி அணுகுவது என்பது குறித்து விவாதித்தோம்
Apr 29, 2018, 4:38 pm IST
ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது
Apr 29, 2018, 4:38 pm IST
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுதல், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி குறித்து விவாதித்தோம்
Apr 29, 2018, 4:38 pm IST
சென்னையில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவை சந்தித்த பின்னர் ஸ்டாலின் பேட்டி
Apr 29, 2018, 4:38 pm IST
அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை- ஸ்டாலின்
Apr 29, 2018, 4:38 pm IST
இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாக்க குஜராத் வாழ் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
Apr 29, 2018, 4:38 pm IST
நீரும் சோறும் வேண்டும், மீத்தேன் வேண்டாம் என்ற வாசகம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
Apr 29, 2018, 4:37 pm IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குஜராத் வாழ் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
Apr 29, 2018, 3:40 pm IST
சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
Apr 29, 2018, 3:40 pm IST
மெரினா கடற்கரை உட்புறச் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு
Apr 29, 2018, 3:40 pm IST
காவிரிக்காக போராட்டம் நடத்த மக்கள் கூடிவிடக்கூடாது என போலீஸ் கெடுபிடி